WhatsApp-ஐ தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி?

 WhatsApp-ஐ தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி?

தமிழ் உள்ளிட்ட மற்ற பிராந்திய மொழிகளில் WhatsApp-ஐ பயன்படுத்துவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Meta-க்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்மான WhatsApp-க்கான மிகப்பெரிய மார்க்கெட்களில் இந்தியாவும் ஒன்றாகும். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி, பெங்காலி, ஒரியா என பல பிராந்திய மொழிகள் இந்தியாவில் உள்ளன.

அதேபோல் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் பல் வேறு மொழிகள் பேசப்படுகினறன. அதற்கு ஏற்ப ஒரு பரந்த பயனர் தளத்தை பூர்த்தி செய்ய, WhatsApp பல முக்கிய பிராந்திய மொழிகளில் பல ஆப்ஷன்களை வழங்குகிறது.

அதற்கு ஏற்ப பயனர்கள் தங்களுக்கு ஏற்ற மொழியில் WhatsApp-ஐபயன்படுத்த முடியும். அதற்கு நம் ஸ்மார்ட்போனில் சில மாற்றங்களை செய்தால் போதும்.

இப்போது, WhatsApp-ன் மொழியை (language of WhatsApp) மாற்ற 2 வழிகள் உள்ளன. முதலாவது உங்களது ஸ்மார்ட் போனின் மொழியை முழுவதுமாக மாற்றுவது.

இரண்டாவது வழி WhatsApp-ன் மொழியை மட்டுமே மாற்றுவது.

வாட்ஸ்அப் தற்போது iPhone இல் 40 மொழிகளுக்கும் மற்றும் Android டிவைஸ்களில் 60 மொழிகளுக்குமான மொழி ஒருங்கிணைப்பை (language integration) செயல்படுத்தி உள்ளது.

இது உங்கள் டிவைஸில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொழியை பொறுத்தது. உதாரணமாக நீங்கள் மொழியை தமிழுக்கு மாற்றினால், WhatsApp தானாகவே தமிழ் மொழியில் செயல்படத் தொடங்கும். உங்கள் வாட்ஸ்அப் WhatsApp Web-ல் தமிழ் மொழியே பிரதிபலிக்கும்

WhatsApp ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-ல் மட்டுமல்ல KaiOS-ல் இயங்கும் போன்களை கொண்ட யூஸர்களும் பயன்படுத்த கிடைக்கிறது.

 WhatsApp தானாகவே ஸ்மார்ட் போனின் இயல்பு மொழியை ஏற்று கொள்கிறது. எனவே, நீங்கள் மொபைலின் மொழியை தமிழ், பெங்காலி அல்லது வேறு எந்த மொழியிலும் மாற்றி கொண்டாலும் அந்த மொழியில் வாட்ஸ்அப் தானாகவே தோன்றும்.

Android அல்லது iOS போன்ற ஸ்மார்ட் டிவைஸ்களில் மொழியை மாற்றுவதற்கான படிப்படியான முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.,

Android-ல் மொழிகளை மாற்றுவது எவ்வாறு.?

👉உங்கள் மொபைலின் Settings-ற்கு செல்லவும்.

👉System-க்கு சென்று language & input என டைப் செய்யவும்

👉பின் language & input-ல் இருந்து Languages என்பதை செலக்ட் செய்யவும்

👉Add a language என்பதை டேப் செய்து உங்கள் விருப்ப மொழியை தேர்ந்தெடுக்கவும்.

iPhone-ல் மொழிகளை மாற்றுவது எவ்வாறு..?

👉iPhone-ல் Settings-ற்கு செல்லவும், பின் General-லுக்கு சென்று Language & Region-ஐ செலக்ட் செய்யவும்.

👉பின் iPhone Language என்பதற்கு சென்று அதில் தோன்றும் மொழிகளில் உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து Change to என்பதை டேப் செய்யவும்.

KaiOS பயனர்களுக்கு.

👉Settings-ல் Personalisation என்பதை செலக்ட் செய்யவும்

👉கீழ் நோக்கி ஸ்க்ரால் செய்து Language-ஐ செலக்ட் செய்யவும்

👉நீங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுத்து Ok என்பதை அழுத்தவும்.

இரண்டாவது வழியான WhatsApp-ல் நீங்கள் விரும்பும் மொழியை மாற்ற விரும்பினால் செய்ய வேண்டியது.

👉WhatsApp-ற்கு சென்று settings-ஐ ஓபன் செய்யவும்.

👉Chats-ற்கு சென்று App language-க்கு செல்ல வேண்டும்.

👉பின்னர் லிஸ்ட்டில் இருக்கும் உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். 


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.