‘நியோகோவ்’ வைரஸ் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலா?- உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 ‘நியோகோவ்’ வைரஸ் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலா?- உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?

ஜெனீவா: சீன விஞ்ஞானிகள் கண்டறிந்து குறிப்பிட்டுள்ள ‘நியோகோவ்’ என்ற வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.

 சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகம் மற்றும் சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள்கொரோனாகுடும்பத்தைச் சேர்ந்த ‘நியோகோவ்’ என்ற வைரஸ் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வறிக்கை ://www.biorxiv.org/இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 ‘வவ்வால்களிடம் நியோகோவ் என்ற கொரோனாவைரஸ் காணப்படுகிறது. நியோகோவ் வைரஸில் ஒரு மரபணு மாற்றம் ஏற்பட்டால்கூட மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இது அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் வைரஸாகும்.

 அதாவதுஇவ்வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரில் 3 பேரில் ஒருவர் உயிரிழக்கக் கூடும்’ என்று ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

புதிய நியோகோவ் வைரஸ் குறித்த சீன விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை உலக சுகாதார அமைப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தென்னாப்பிரிக்காவில் வாழும் வெளவால்களிடம் நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய வைரஸால்மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும். மனிதர்களிடம் ஏற்படும் 75 வீத தொற்று நோய்களுக்கு விலங்குகள் தான் ஆதாரமாக இருக்கின்றன. கொரோனாவைரஸ் எப்போதுமே விலங்குகளில் தான் இருந்து வருகின்றன. 

குறிப்பாக வெளவால்களிடம்- இந்நிலையில் சீனா பகிர்ந்துள்ள புதிய வைரஸ் குறித்து ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளோம். இந்தத் தகவலைப் பகிந்தமைக்காக சீனாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஆய்வுகளின் அடிப்படையில்NeoCov கோவிட் 19 வைரஸ் போலவே மனித உடலில் ஊடுருவக் கூடியது. இந்த வைரஸ் இன்னும் ஒருமுறை உருமாறினால் அது மனிதர்களைத் தாக்கும் திறன் பெற்றுவிடுமாம். 

இந்த வைரஸும் 2012ல் சவுதியில் உருவான மெர்ஸ் Middle East respiratory syndrome(mers)ஒரே தன்மையுடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மெர்ஸ்வெளவால்களிடம் உருவாகி பின்னர் ஒட்டகங்களுக்குப் பரவி அதன்பின்னர் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவை ஆகும்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://bit.ly/3r9BD6M
https://bit.ly/3r6XuvI

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.