இன்று மின்சாரம் துண்டிக்கப்படுமா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இன்று மின்சாரம் துண்டிக்கப்படுமா?

இன்றைய தினம் மின்சார விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 நாளாந்த மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவுவதால் மின் வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ மற்றும் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையங்கள் நேற்றுமுன்தினம் மூடப்பட்டது. எனினும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு 10,000 மெட்றிக் டன் எரிபொருளை வழங்குவதற்கு கனியவள கூட்டுத்தாபனம் நேற்று இணக்கம் தெரிவித்திருந்தது. 

இதேவேளை, மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அமைச்சர் காமினி லொக்குகே நேற்று தெரிவித்திருந்தார். 

எனினும், நாட்டில் அமைந்துள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் இயங்குவதற்கு தேவையான எரிபொருள் இன்மையால் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் நேற்று பிற்பகல் தெரிவித்தது. 

அதன்படி நேற்று மதியம் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நான்கு கட்டங்களாக ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.