சீனாவில் கேஸ் கசிந்து வெடி விபத்து - அரசுக் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
 
சீனாவில் கேஸ் கசிந்து வெடி விபத்து - அரசுக் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி

சீனாவில் கேஸ் கசிந்து ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். 

சீனாவின் தென் மேற்குப் பகுதியிலுள்ள வூலாங் மாவட்டம் சோங்கிங் நகரில் அரசு துணை மாவட்ட அலுவலகம் செயற்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். 

மதிய உணவு இடைவேளையின் போது ஊழியர்கள் அங்குள்ள அறையில் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.

 கேஸ் கசிந்து தீப்பிடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த வெடிவிபத்தில் அரசு கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. கட்டிட இடிபாடுகளில் ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். உடனே பொலிசார் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இரவு முழுவதும் மீட்புப“ பணி நடந்தது. இந்த விபத்தில் 16 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறும் போது, ‘வெடி விபத்தில் கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் நள்ளிரவில் மீட்கப்பட்டன’ என்று தெரிவித்துள்ளன. 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.