கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில் தீ பரவல்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில் தீ பரவல்!

வீதி போக்குவரத்து சில மணிநேரம் பாதிப்பு! கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

 குறித்த நேரத்தில் வீதி போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகபுரம் வீதியில் உள்ள சேவியர் கடை சந்தியில் அமைந்துள்ள பிரபல கட்டடப் பொருள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையத்தில் முற்பகல் 10.30 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

 இதனை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினரின் கடும் பிரயத்தனத்தினால் தீ பரவல் கட்டுப்பாட்டக்குள் வந்தது. 

இதன்போது கனகபுரம் முறிப்பு வீதியின் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதிகளவான மக்கள் கூடியிருந்தமையால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. 

நெரிசலை கட்டுப்படுத்த பொலிசார் கடமையில் ஈடுபட்டனர். தீயணைப்பு பிரிவினருடன் இணைந்து பொது மக்களும், வர்த்தகர்களும், பிரதேச சபை உத்தியோகத்தர்களும் துரிதமாக செயற்பட்டு சுமார் 1 மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

 மின்னொளுக்கினால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் ஆரம்பித்துள்ளனர். 

தீப்பரவல் காரணமாக பாரிய இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.