ஒமிக்ரானை அடுத்து இஸ்ரேலில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 ஒமிக்ரானை அடுத்து இஸ்ரேலில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு.

இஸ்ரேல் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது. கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து “ப்ளூரோனா” என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

 இது ப்ளூ காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஏற்படுவதை குறிக்கும். மத்திய இஸ்ரேலில் உள்ள பெட்டாச் டிக்வாவில் உள்ள பெய்லின்சன் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு ப்ளூரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. 

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரசுடன் ப்ளூவென்சா தொற்று இணைவதால் கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் நிமோனியா ஏற்படலாம் என்றும் சில சமயங்களில் மரணமும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை ப்ளூரோனா வைரஸ் தொற்று குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.