பெற்றோர் சண்டையும், குழந்தைகளின் மனநிலையும்.

பெற்றோர் சண்டையும், குழந்தைகளின் மனநிலையும்.


குழந்தைகளிடம் நிறைவேற்ற முடியாத வாக்குகளை கொடுக்கக்கூடாது. வாக்குறுதியை தவற விடும் பெற்றோரிடம் குழந்தைகளின் நம்பிக்கை குறையும்.

பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதே பெற்றோரின் ஆசையாக இருக்கும். குழந்தைகளின் முன்னால் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும், அவர்களின் மனதில் தாக்கங்களை ஏற்படுத்துகினறன.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர் மேற்கொள்ள வேண்டியவை தவிர்க்க வேண்டியவை பற்றி பார்க்கலாம்

👉கோபம் சண்டை வேண்டாம்.

குழநதைகள் முன்னிலையில் பெற்றோர் சண்டைபோட்டுக்கொண்டால் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையை உணர்வார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு மனஅழுத்தம், பயம், பதற்றம் போன்றவை உருவாகும்.

👉அவர்களுக்காக பேசுவது.

குழந்தைகளிடன் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோரே பதில் கூறும் போது குழந்தைகள் சகஜமாக பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காது. இந்த செயல் அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கும். கூச்ச சுபாவத்தை அதிகரிக்கும்.

👉கேட்பதற்கு முன்பே வாங்கித்தருவது.

எதையும் குழந்தைகள் கேட்பதற்கு முன்பே வாங்கித்தருவது பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் தவறாகும். இதன் மூலம் அவர்களின் கேட்டு வாங்கும் திறனை குறைத்து விடுகிறீர்கள். அது மட்டுமல்லாமல் தங்களுக்கு எது தேவை என்பதை உணரும் முன்பே பெறுவதால் எல்லாமே எப்போதும் கிடைக்கும் என்ற மனநிலையும் உருவாகிறது.

👉எல்லாமே கிடைப்பது.

குழந்தைகள் ஒரு பொருளை கேட்டவுடன் அந்த பொருள் அவர்களுக்கு தேவையா? இல்லையா? என்பதை பற்றி எந்த ஆலோசனையும் செய்யாமல் உடனே வாங்கித்தருவது தவறானதாகும். அதன் தேவை என்ன? எவ்வளவு நாள் பயன்படுத்துவார்கள்? போன்ற விஷயங்களை குழந்தையுடன் விவாதிக்க வேண்டும். இது அவர்களின் நிதி மேலாண்மையையும் பேச்சு திறனையும் வளர்க்க உதவும்.

👉நேரம் ஒதுக்குதல்.

இன்றைய சூழலில் பல வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரம் குறைவாக இருக்கிறது. வேலை நாட்களில் நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும், விடுமுறை நாட்களிலாவது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்.

👉அந்தரங்க பகிர்வுகள் கூடாது.

குழந்தைகள் முன் கெட்டவார்த்தைகள் மட்டுமல்ல, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று எண்ணி ஜாடையாக கூட அந்தரங்கங்களை பேசக்கூடாது பிறர் பற்றிய அவதூறுகளையும் பேசக்கூடாது.

👉பொய் சொல்லக்கூடாது.

குழந்தைகள் முன் பொய் பேசுவதை தவிர்க்க வேண்டும். .ஏதாவது ஒரு சூழலில் குழந்தைகள் முன்னிலையில் பொய் சொல்லி சமாளிக்கும் போதும் நண்பர்கள் மத்தியில் பொய் சொல்லும் போதும் அவர்கள் கவனிக்கிறார்கள். இதன் மூலம் பொய் சொல்வது இயல்பானது என்கிற மனநிலைக்கு வந்து விடுவார்கள்.

👉வாக்குத்தவறக்கூடாது.

குழந்தைகள் நம் வார்த்தைகளை நம்புகிறார்கள். எனவே அவர்களிடம் நாம் கொடுக்கும் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும். நிறைவேற்ற முடியாத வாக்குகளை கொடுக்கக்கூடாது. வாக்குறுதியை தவற விடும் பெற்றோரிடம் குழந்தைகளின் நம்பிக்கை குறையும்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.