17 உணவுப் பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்படும்! |

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

17 உணவுப் பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்படும்! |

 பஷில் ராஜபக்க்ஷ. விவசாயிகள் பயிரிடக்கூடிய 17 உணவுப் பொருட்கள் இனங்காணப்பட்டுள்ளன. 

அவை உள்ளூரில் பயிரிடப்பட்ட பின்னர் அவற்றுக்கான இறக்குமதி நிறுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் 2022 வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

நாடு செலுத்த வேண்டிய சகல வெளிநாட்டு கடனுக்கான டொலர்களையும் அடுத்த வருடத்தில் செலுத்துவதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். 

கடன் செலுத்திய பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் கடன் பெறப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர் ,அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் 500 மில்லியன் டொலரும், ஜூன் மாதத்தில் ஆயிரம் மில்லியன் டொலரும் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

 டுபாயும் மாலைதீவும் அச்சமின்றி சுற்றுலா பயணிகளுக்காக நாட்டை திறந்துள்ளன. சுற்றுலா அமைச்சர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சேவைத் துறையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

 கப்பற்துறையில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. எமது நாட்டின் அமைவிடம் காரணமாக விமான சேவை வாயிலாகவும் அதிக வருமானம் பெற முடியும். தகவல் தொழில் நுட்ப கம்பனிகள் எமது நாட்டுக்கு வந்துள்ளன. 2,000 இளைஞர்களை அதிக சம்பளத்துக்கு நியமித்துள்ளனர். 

5,000 பேருக்கு வரை தொழில் கிடைக்க இருக்கிறது என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார். கடன் பெற்று ஏன் வீதி அமைக்கிறீர்கள் என்று வினவுகின்றனர். கைத்தொழில் துறை முன்னேற்றத்திற்கு வீதி அபிவிருத்தி பிரதானமானது. மின்சாரத் துறை மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முன்னேற்றப்பட்டது.

ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் நீர் வழங்குவோம். பலமான நாடொன்றை உருவாக்க ஒத்துழையுங்கள். இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் நிதியை சேமிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

 வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது தெளிவான வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டது. நாட்டின் அந்நியச் செலாவணியில் நெருக்கடி நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார். உலக வங்கியின் பிரதி தலைவர் இலங்கைக்கு வருகை தந்து 500 மில்லியன் டொலரை வழங்கினார். 

அது வீதி அபிவிருத்திக்காக வழங்கப்பட்டது. விவசாயம் மற்றும் சேவை வழங்கலில் மாத்திரமல்லாது கைத்தொழில் துறையிலும் நாட்டை அபிவிருத்தி செய்வது இலக்கு என்றும் நிதியமைச்சர் பசில்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். (அரசாங்க தகவல் திணைக்களம்)
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.