மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் |

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் |

உபுல் ரோஹண. பாடசாலைகளைக்குள்ளும் கொவிட் -19 கொத்தணிகள் உருவாக ஆரம்பித்துள்ளன. 

இந்த நிலைமையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை சகலரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். 

நாட்டில் மீண்டும் கொவிட் -19 பரவல் அதிகரித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , பாடசாலை கட்டமைப்புக்குள் நிர்வாகப் பிரிவினர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும்பாலானோர் கொவிட் -19 தொற்றாளர்களாக இனங்காணப்படுகின்றனர். 

இதனால் சில இடங்களில் கொவிட் -19 கொத்தணிகளும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அதிகரித்துவரும் கொவிட் -19 தொற்று பவலைக் கட்டுப்படுத்த வேண்டிய முழு பொறுப்பும் பாடசாலை நிர்வாகப் பிரிவினருடையதாகும். 

அதேபோன்று மாணவர்களும் , பெற்றோருக்கும் இந்த பொறுப்பு காணப்படுகிறது. சுகாதார விதிமுறைகள் அனைத்தையும் முறையாகப் பின்பற்றுமாறு பெற்றோர் தமது பிள்ளைகளை தொடர்ந்தும் அறிவுறுத்த வேண்டும். 

குறிப்பாக பாடசாலைகளுக்குள் சுகாதார விதிமுறைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீற வேண்டாம் என்று அறிவுறுத்துவது அத்தியாவசியமானதாகும் என்றார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.