அபுதாபி சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் ரணில்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அபுதாபி சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் ரணில்.

டிசம்பர் 4ஆம், 5ஆம் திகதிகளில் அபுதாபியில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் உரையாற்றுவதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாநாட்டில், நாடுகளின் ஆளும் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளத.

 கொவிட் பெருந்தொற்றுடன் இந்து சமுத்திரப் பிராந்தியம் நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் செயலாளர் சந்தித் சமரசிங்க தெரிவித்துள்ளார். 

இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சீனா தனது அரசியல் மற்றும் பொருளாதார பிடியை இறுக்கி வருகிறது. உச்சிமாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் ஆளும் கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உச்சிமாநாட்டில் உரையாற்றவுள்ளனர். 

ஆனால் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார். இலங்கையின் முன்னாள் பிரதமருக்கு சர்வதேச இராஜதந்திரம் பற்றிய விரிவான அறிவு மற்றும் பிராந்தியத்திற்கான தூர நோக்கு ஆகியவற்றினால் மாநாட்டில் உரையாற்றுவதற்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்..

 ஆசியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் பேரழிவு, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில்,வார இறுதியில் நடைபெறும் பிராந்திய தலைவர்கள் மாநாட்டில், ரணில் விக்ரமசிங்கவின் நோக்கு மற்றும் திட்டம் ஆகியவை குறித்து பிராந்தியத் தலைவர்கள் உன்னிப்பாக கவனம் செலுத்துவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.