பிரதேசங்களில் இன்று(01) அடுத்தடுத்து எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மட்டக்களப்பு, காலி மற்றும் தலவாகல பிரதேசங்களில் இன்று(01) அடுத்தடுத்து எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின!

01. மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் தேனிர் தயாரிப்பதாற்காக எரிவாயு அடுப்பினை செயல்படுத்திய போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 எரிவாயு அடுப்பினை செயற்படுத்தி விட்டு வெளியில் வந்து உறவினர்களிடம் கதைத்துக் கொண்டிருந்த வேளை அவர்களது சமையலறையில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டதை உணர்ந்து அங்கு போய் பார்வையிட்டபோது குறித்த எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

02. தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோக்கர்ஸ் பகுதி மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

03. காலி-உடுகமை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை (01) எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த வெடிப்புச் சம்பவத்தில் வீட்டில் இருந்த எந்தெவொரு நபருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.