தரமற்ற எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக மாற்ற நீதிமன்றம் உத்தரவு.

தரமற்ற எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக மாற்ற நீதிமன்றம் உத்தரவு.


நுகர்வோர் வீட்டிலுள்ள எரிவாயு சிலிண்டர்களுக்குப் பதிலாக தரமான எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக வழங்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவ னங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

எதிர்காலத்தில் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட தரத்துக்கு அமைவான எரிவாயு சிலிண்டர்களை மாத்திரமே சந்தைக்கு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு கோரி சிவில் சமூக ஆர்வலரான நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த ரிட் மனு தொடர்ந்து நான்காவது நாளாக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ருவான் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வீட்டு எரிவாயு சிலிண்டர்களில் புரொப்பேன் கலவையை 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எரிவாயு நிறுவனங்கள் நீதிமன்றில் தெரிவித்தன.

இந்த மனு எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.