வரலாற்றில் இன்று டிசம்பர் 04.2021

 வரலாற்றில் இன்று டிசம்பர் 04.2021


திசம்பர் 4  கிரிகோரியன் ஆண்டின் 338 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 339 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 27 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்.

👉 1259 – பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.

👉 1619 – 38 குடியேறிகள் வர்ஜீனியாவின் பெர்க்லியில் தரையிறங்கினர்.

👉1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார.

👉1791 – உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி அப்சர்வர் வெளிவந்தது.

👉1829 – ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்கும் சட்டத்தை தலைமை ஆளுநர் வில்லியம் பென்டிங்கு பிரபு கொண்டு வந்தார்.

👉1865 – வட கரொலைனா, ஜார்ஜியா ஆகிய அமெரிக்க மாநிலங்கள் இரு வாரங்களில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என அறிவித்தன.

👉1918 – முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் பிரான்சு சென்றார். பதவியில் உள்ள அமெரிக்கத் தலைவர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும்.

👉1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியக் கப்பல் நெல்சன் இசுக்காட்லாந்து கரையில் கண்ணி வெடியில் சிக்கி சேதமடைந்தது.

👉1943 – இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவின் எதிர்ப்புத் தலைவர் யோசிப் டீட்டோ “சனநாயக யூகொசுலாவிய அரசு” ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.

👉1945 – ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது.

👉1957 – ஐக்கிய இராச்சியத்தில் லூவிசாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 92 பேர் உயிரிழந்தனர்.

👉1958 – பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் பெனின் சுயாட்சி உரிமை பெற்றது.

👉1959 – ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.

👉1967 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா, மற்றும் தெற்கு வியட்நாமியப் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதின.

👉1971 – இந்தியக் கடற்படை பாக்கித்தானியக் கடற்படையையும் கராச்சியையும் தாக்கியது.

👉1971 – பாக்கித்தான் கடற்படைக்குச் சொந்தமான காசி என்ற நீர்மூழ்கிக் கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

👉1971 – இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.

👉1977 – மலேசியா எயர்லைன்சு வானூர்தி 653 கடத்தப்பட்டு ஜொகூரில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் உயிரிழந்தனர்.

👉1984 – குவைத் விமானம் ஒன்றை ஹெஸ்புல்லா அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர்.

👉1984 – 1984 மன்னார் படுகொலைகள்: இலங்கைப் படையினர் மன்னாரில் 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர்.

👉1991 – டெரி ஆண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பெய்ரூட்டில் விடுவிக்கப்பட்டார்.

👉1991 – ஐக்கிய அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.

👉1992 – அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்ப அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் உத்தரவிட்டார்.

👉2005 – ஆங்காங்கில் பல்லாயிரக்கணக்கானோர் மக்களாட்சி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தின பிறப்புகள்.

👉1866 – வசீலி கண்டீன்ஸ்கி, உருசிய-செருமானிய ஓவியர் (இ. 1944)

👉1875 – ரெய்னர் மரியா ரில்கே, ஆத்திரிய-சுவிட்சர்லாந்து கவிஞர் (இ. 1926)

👉1888 – ரமேஷ் சந்திர மஜும்தார், இந்திய வரலாற்று அறிஞர் (இ. 1980)

👉1889 – நீலகண்ட பிரம்மச்சாரி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1978)

👉1892 – பிரான்சிஸ்கோ பிராங்கோ, எசுப்பானியாவின் பிரதமர் (இ. 1975)

👉1893 – ஹச். பி. அரி கௌடர், இந்திய அரசியல்வாதி (இ. 1971)

👉1898 – க. சீ. கிருட்டிணன், இந்திய இயற்பியலாளர் (இ. 1961)

👉1910 – ரா. வெங்கட்ராமன், 6வது இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 2009)

👉1919 – ஐ. கே. குஜரால், 12வது இந்தியப் பிரதமர் (இ. 2012)

👉1922 – கண்டசாலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. 1974)

👉1925 – ஆல்பர்ட் பாண்டுரா, கனடிய-அமெரிக்க உளவியலாளர்

👉1930 – கமுகறை புருஷோத்தமன் நாயர், மலையாளப் பின்னணிப் பாடகர் (இ. 1995)

👉1949 – ஜெப் பிரிட்ஜஸ், அமெரிக்க நடிகர்

👉1949 – எஸ். இராமச்சந்திரன், இலங்கை மெல்லிசை, பொப் இசைப் பாடகர் (இ. 2020)

👉1963 – செர்கய் புப்கா, உக்ரைனிய தடியூண்டித் தாண்டும் வீரர்

👉1964 – மரிசா டோமீய், அமெரிக்க நடிகை

👉1969 – ஜெய்-சி, அமெரிக்க ராப் இசைக்கலைஞர்

👉1974 – அனுபமா குமார், தமிழகத் திரைப்பட நடிகை

👉1979 – சமஸ், தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர்

👉1982 – நிக் வோய்ச்சிச், ஆத்திரேலிய மதப்போதகர்

இன்றைய தின இறப்புகள்.

👉கிமு 530 – சைரசு, பாரசீக மன்னர் (பி. கிமு 600)

👉749 – தமாஸ்கஸ் நகர யோவான், சிரிய மதகுரு, புனிதர் (பி. 676)

👉1131 – ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர், வானியலாளர் (பி. 1048)

👉1576 – இரேடிக்கசு, ஆத்திரிய-சிலோவாக்கிய கணிதவியலாளர், நிலவைரையாளர் (பி. 1514)

👉1679 – தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1588)

👉1850 – வில்லியம் ஸ்டர்ஜியன், மின்சார இயக்கியைக் கண்டுபிடித்த ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1783)

👉1953 – அ. வேங்கடாசலம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (பி. 1886)

👉1976 – ந. பிச்சமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (பி. 1900)

👉2009 – விச்சிசுலாவ் தீகனொவ், சோவியத், உருசிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (பி. 1928)

👉2014 – வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்திய நீதிபதி, அரசியல்வாதி (பி. 1914)

👉2015 – மசூர் மௌலானா, இலங்கை அரசியல்வாதி (பி 1932)

👉2017 – சசி கபூர், இந்திய நடிகர் (பி. 1938)

இன்றைய தின சிறப்பு நாள்.

👉கடற்படையினர் தினம் – (இந்தியா)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.