32 விதத்தில் உருமாற்றம் அடையக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

32 விதத்தில் உருமாற்றம் அடையக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

புதிய வகையில் உருமாறுதல் அடைந்த கொரோனா வைரசை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியில் 32 வித உருமாற்றம் அடையக்கூடிய பி.1.1.529 வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த புது வகை கொரோனா வைரஸ் இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து முன்னேறக் கூடிய திறன் இந்த புது வகை வைரசுக்கு உள்ளது.

இதன் காரணமாக, அடுத்தடுத்த கொரோனா அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பி.1.1.529 கொரோனா வைரஸ் 32 விதமான உருமாற்றங்களை அடையும் திறன் கொண்டது. இதன் காரணமாக, மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் நோய்க்கிருமியைத் தாக்குவது கடினம். 

ஆனால், சற்று ஆறுதலான விஷயம் என்னவென்றால், இந்த புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ், முந்தைய வைரசுகளை போல எளிதில் பரவாது என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியில் வைரஸ் பிரிவின் ஆராய்ச்சியாளரான டாக்டர் டாம் பீகாக் தெரிவித்துள்ளார்.

 இந்த புதிய வகை கொரோனா வைரஸ் போட்ஸ்வானாவில் இம்மாதம் 11ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு 3 பேருக்கு இந்த புதிய வகை வைரஸ்o தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.மேலும், தென் ஆப்பிரிக்காவில் ஆறு பேருக்கும், ஹாங்காங்கில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து சென்ற ஒருவருக்கும் பரவி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.