கிண்ணியா படகு விபத்தில் மாணவர்கள் உட்பட இதுவரை 08பேர் உயிரிழந்துள்ளனர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

கிண்ணியா படகு விபத்தில் மாணவர்கள் உட்பட இதுவரை 08பேர் உயிரிழந்துள்ளனர்.

கிண்ணியா குருஞ்சாகேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட எட்டு பேர் மரணமடைந்துள்ளனர்.

 குறித்த படகில் பயணித்த மேலும் 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு இன்று (23) காலை விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அந்த படகு பாதையில் 20 பேர் பயணித்துள்ளனர். 

அதில், சிலர் நீந்தி கரையைச் சேர்ந்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. 

பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால், கிண்ணியா- குருஞ்சான்குளம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த படகுபாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதனை விடவும் அதிகரிக்கும் என அச்சம் கொண்டிருக்கும் பொலிஸார், கடற்படையினருடன் இணைந்து தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.