கறுப்புச் சந்தையில் வெற்று எரிவாயு சிலிண்டர் 15,000-20,000 ரூபாவாக உயர்கிறது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 கறுப்புச் சந்தையில் வெற்று எரிவாயு சிலிண்டர் 15,000-20,000 ரூபாவாக உயர்கிறது.

12.5 கிலோ எடையுள்ள வெற்று எரிவாயு சிலிண்டர் 15,000 ரூபா முதல் 20,000 ரூபா வரையிலான விலையில் கறுப்புச் சந்தை வியாபாரிகளால் விற் பனை செய்யப்படுகின்றது. 

12.5 கிலோ வெற்று எரிவாயு சிலிண்டருக்கு 15,000 ரூபா முதல் 20,000 ரூபா வரை பெறப்படுவதாக இணையத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. 

5 கிலோ எடை கொண்ட வெற்று எரிவாயு சிலிண்டர் 8000 ரூபா - 12000 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டு பிரதான எரிவாயு நிறுவனங்களும் பல மாதங்க ளாக தங்கள் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கவில்லை.

 எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முன், வீட்டு உபயோகத்திற் கான வெற்று எரிவாயு சிலிண்டர் 4,250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. 

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக புதிய எரிவாயு சிலிண்டர் களை நுகர்வோருக்கு விற்பனை செய்வதை அந்நிறுவனங்கள் நிறுத்தி விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.