இம்முறை தேசியப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்களில் மாற்றங்கள் என்ன?.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இம்முறை தேசியப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்களில் மாற்றங்கள் என்ன?. 


இம்முறை தேசியப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கும் போது, பாடத்திட்டங்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு வினாத்தாள் தயாரிப்பில் பாடத்திட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என பரவி வரும் வதந்திகள் தொடர்பாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுளளார்.

 தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு பாடத்திட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று சில அரச பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள், மாணவர்களுக்குத் தெரிவித்துள்ளனர். 

மற்றும் சிக்கலான பாடத்திட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று சில ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

 ஆனால் இன்னும் சில ஆசிரியர்கள், இலகுவான பாடத்திட்டங்கள் நீக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். 

இதனால் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். குறித்த பரீட்சைகளை எழுதுவதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், பாடத்திட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

 இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையும் மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (அரசாங்க தகவல் திணைக்களம்) 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.