அரச சேவை நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளது...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அரச சேவை நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளது...

அரச ஊழியர்களுக்கு இனியும் நிதி ஒதுக்க முடியாது. அரச ஊழியர்களுக்கு இனியும் நிதி ஒதுக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை மீளா ய்வு செய்வதற்காக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். 

நாடு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அரச சேவையானது விரி வடைந்துள்ளதாகவும் இதனால் தொடர்ந்தும் அரச சேவைக்குச் சலு கைகளை வழங்க முடியாது எனவும் அவர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். 

அரச சேவை நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளது. அரச ஊழியர்களுக்குச் சலுகைகளை வழங்க வேண்டுமாயின் அதற்காகப் பொதுமக்களிடம் இருந்து வரியை அறவிட வேண்டும். இதன் காரணமாக மேலும் ஒரு வருடத்திற்கு அரச சேவைக்கு பொது நிதியைச் செலவிட முடியாது. 

இலங்கை சுதந்திரமடையும் போது நாட்டின் பொது மக்களில் 118 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருந்தார். எனினும் தற்போது 13 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருக்கின்றார். இந்த அரச ஊழியர்களில் பலர் காலம் கடந்து திருமணம் செய்கின்றனர். 

இந்த அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் காலத்திலேயே அவர்களின் பிள்ளைகள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுகின்றனர் என்பது மட்டுமல்ல, உயர்கல்வியைக் கற்க ஆரம்பிக்கின்றனர். 

இது அரச ஊழியர்கள் பெரிய பிரச்சினை. இதன் காரணமாகவே நாங்கள் அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மேலும் 10 ஆண்டுகள் அதிகரித்துள்ளோம். தற்போது அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 55 இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அவர்களுக்குப் பொருளாதார நன்மைகள் கிடைக்கும். அத்துடன் அரச சேவைக்கு அனுபவம் கொண்ட ஊழியர்கள் அவசியம்.

 எதிர்காலத்தில் வருடாந்தம் ஓய்வுபெறும் அரச ஊழியர்களின் சதவீதத் திற்கு அமைய புதிய தொழில் வாய்ப்புக்கள் வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.