ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல் - நியூசிலாந்து தோற்றால்தான் இந்தியாவுக்கு வாய்ப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 🏏ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல் - நியூசிலாந்து தோற்றால்தான் இந்தியாவுக்கு வாய்ப்பு.

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றுவரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் “குருப்-1” பிரிவில் நேற்றுடன் “லீக்“ ஆட்டங்கள் முடிந்தது.

 இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகளும் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றன. 

நிகர ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து முதலிடத்தையும், ஆஸ்திரேலியா 2-வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

 தென் ஆப்பிரிக்கா அதிர்ஷ்டம் இல்லாமல் 3-வது இடத்தை பிடித்து வெளியேறியது. இலங்கை (4 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (2 புள்ளி), வங்காளதேசம் (வெற்றி எதுவும் பெறவில்லை) ஆகிய அணிகள் ஏற்கனவே வெளியேறி இருந்தன. குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் மட்டுமே தகுதி பெற்றுள்ளது. 

இந்தப் பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் (மாலை 3.30), பாகிஸ்தான்-ஸ்காட்லாந்து (இரவு 7.30) அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்து அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. 

அந்த அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால் 8 புள்ளியுடன் அரை இறுதிக்கு தகுதி பெறும். இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து தோற்றால் தான் இந்தியா அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க முடியும்.

 அதாவது ஆப்கானிஸ்தானின் வெற்றிக்காக ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. நியூசிலாந்து வெற்றி பெற்றால் இந்தியா போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

 ஆப்கானிஸ்தான் வென்று, நாளைய ஆட்டத்தில் இந்திய அணி நமீபியாவை வீழ்த்தினால் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் 6 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் ஒருநாடு முன்னேறும். தற்போது இந்தியாவின் ரன்ரேட் நன்றாக இருக்கிறது.

 ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிது அல்ல. இதனால் நியூசிலாந்து அணியே அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது‌ . இந்தியா வெளியேற்றப்படும் நிலையில் இருக்கிறது. 

8 புள்ளியுடன் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி ஸ்காட்லாந்தை வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஸ்காட்லாந்து அணி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.