உருமாற்றம் அடைந்த ஆல்பா கொரோனா வைரஸ் நாய், பூனைகளிடம் பரவியது- ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 உருமாற்றம் அடைந்த ஆல்பா கொரோனா வைரஸ் நாய், பூனைகளிடம் பரவியது- ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

உருமாற்றம் அடைந்த ஆல்பா கொரோனா வைரஸ் நாய், பூனைகளிடம் பரவியது- ஆய்வில் அதிர்ச்சி தகவல் நாய், பூனை தென்கிழக்கு இங்கிலாந்தில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஆல்பா’ வகை கொரோனா வைரஸ் நாய், பூனைகளுக்கு பரவி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

 வாஷிங்டன்: உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து பல்வேறு வகையில் உருமாறியது. 

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

 இதனை அடையாளம் காண்பதற்கு உலக சுகாதார அமைப்பு உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு பெயர்களை சூட்டியது. அதில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரசுக்கு ‘ஆல்பா’ என்றும், இந்தியாவில் உருமாறிய கொரோனாவுக்கு ‘டெல்டா’ என்றும் பெயர் சூட்டப்பட்டது. 

மேலும் டெல்டா வகை வைரஸ் முன்பிருந்த வைரசை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

இந்த நிலையில் தென்கிழக்கு இங்கிலாந்தில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஆல்பா’ வகை கொரோனா வைரஸ் நாய், பூனைகளுக்கு பரவி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இது கால்நடை மருத்துவ துறையினர் செய்த ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 2 பூனைகள் மற்றும் ஒரு நாய் ஆகியவற்றுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவைகள் ‘ஆல்பா’ வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

 இந்த செல்லப்பிராணிகளுக்கு நோய் பாதிக்கப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்பாக சுவாச பிரச்சினைகள் இருந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

மேலும் இந்த செல்லப்பிராணிகள் அனைத்துக்கும் இதய நோயின் கடுமையான தொடக்கமும் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து நிபுணர் லூகா பெராசின் கூறும்போது, ‘ஆல்பா’ கொரோனா வைரசால் விலங்குகள் பாதிக்கப்பட்டு இருப்பது எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 இது முன்பை விட மாறுபட்டது. கொரோனா வைரசால் விலங்குகளும் பாதிக்கப்படும் அபாயத்தை எடுத்துக் காட்டுகின்றன. 

கடுமையான இதய பிரச்சினைகள் இருப்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டி உள்ளோம். எங்களின் தரவுகளின் அடிப்படையில் மனிதர்களிடம் இருந்து செல்லப் பிராணிகளுக்கு வைரஸ் பரவுகிறது என அவர் கூறினார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.