வரலாற்றில் இன்று நவம்பர் 07.11

 வரலாற்றில் இன்று நவம்பர் 07.11


நவம்பர் 7  கிரிகோரியன் ஆண்டின் 311 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 312 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 54 நாட்கள் உள்ளன.


 இன்றைய தின நிகழ்வுகள்.


👉335 – அலெக்சாந்திரியாவின் அத்தனாசியார் கான்ஸ்டண்டினோபில் நகருக்கு தானியங்களை எடுத்துச் செல்வதற்குத் தடையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

 👉1492 – உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில் கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது.

👉1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது.

👉1775 – வட அமெரிக்காவில் பிரித்தானியப் படைகளில் இணைந்த அடிமைகள் அனைவருக்கும் அவர்களது உரிமையாளர்களிடம் இருந்து முழுமையான விடுதலை பெற்றுக் கொடுக்கும் உடன்பாட்டில் வர்ஜீனியா குடியேற்றத்தின் பிரித்தானிய ஆளுநர் ஜான் மறே கையெழுத்திட்டார்.

👉1893 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

👉1907 – மெக்சிக்கோவில் யேசுசு கார்சியா என்பவர் டைனமைட்டு நிரப்பப்பட்ட எரியும் தொடருந்தை ஆறு கிமீ தூரம் தனிமையான இடத்துக்கு செலுத்தி வெடிக்க வைத்து நக்கோசாரி டி கார்சியா கிராமம் எரியாமல் காப்பாற்றினார்.

👉1910 – உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.

👉1913 – அமெரிக்காவின் வடமேற்குப் பகுதி, மற்றும் கனடாவில் ஒண்டாரியோ பகுதிகளை பெரும் புயல் தாக்கியது. 250 பேர் உயிரிழந்தனர், பெரும் சேதம் ஏற்பட்டது.

👉1916 – அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் தொடருந்து எச்சரிக்கைக் கதவுகளை உடைத்து கால்வாய் ஒன்றில் வீழ்ந்ததில் 46 பேர் உயிரிழந்தனர்.

👉1917 – அக்டோபர் புரட்சி: விளாதிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் உருசியாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய யூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது). போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.

👉1917 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் உதுமானியரிடம் இருந்து காசாப் பகுதியைக் கைப்பற்றினர்.

👉1918 – மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு நோய் காரணமாக 7,542 பேர் (20% மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.

👉1919 – உருசியப் புரட்சியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று, 10,000 இற்கும் அதிகமான பொதுவுடைமைவாதிகள் அமெரிக்காவின் 23 நகரங்களில் கைது செய்யப்பட்டனர்.

👉1929 – நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.

👉1931 – மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.

👉1940 – வாசிங்டனில் டகோமா குறும்பாலம் அமைக்கப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில், கடும் புயலில் சிக்கி இடிந்து வீழ்ந்தது.

👉1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் மருத்துவக் கப்பல் ஆர்மீனியா நாட்சி ஜெர்மனியின் விமானக் குண்டுவீச்சில் சேதமடைந்து மூழ்கியது. 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

👉1944 – சோவியத் உளவாளி ரிச்சார்டு சோர்கி சப்பானியரால் கைப்பற்றப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.

👉1944 – பிராங்க்ளின் ரூசவெல்ட் நான்காவது தடவையாக ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

👉1956 – சூயெசு நெருக்கடி: எகிப்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு ஐக்கிய இராச்சியம், பிரான்சு, இசுரேல் ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கேட்டது.

👉1956 – அங்கேரியப் புரட்சி, 1956: சோவியத்-ஆதரவு யானொசு காதர் புடாபெஸ்ட் திரும்பி, அங்கேரியின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

👉1975 – வங்காளதேசத்தில், அபூ தாகிர் தலைமையில் படையினர் பிரிகேடியர் காலிது மொசாரபைக் கொலை செய்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த இராணுவத் தலைவரும், பின்னாளைய அரசுத்தலைவருமான சியாவுர் ரகுமானை விடுவித்தனர்.

👉1983 – அமெரிக்க மேலவைக் கட்டடத்தில் குண்டு வெடித்து, பெரும் சேதம் ஏற்பட்டது.

👉1987 – தூனிசியாவில், அபீப் போர்கீபா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.

👉1989 – கிழக்கு செருமனியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து பிரதமர் வில்லி ஸ்டோப் தலைமையிலான அரசு பதவி விலகியது.

👉1991 – மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. தீநுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.

👉1994 – அமெரிக்காவின் வட கரொலைனா பல்கலைக்கழகத்தின் மாணவர் வானொலி நிலையம் உலகின் முதலாவது இணைய வானொலி சேவையை ஒலிபரப்பியது.

👉2000 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

👉2002 – அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.

👉2007 – பின்லாந்து பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

👉2012 – குவாத்தமாலாவில் பசிபிக் கரையில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 52 பேர் உயிரிழந்தனர்.


 இன்றைய தின பிறப்புகள்.


👉1186 – ஒகோடி கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1241)

👉1728 – ஜேம்ஸ் குக், ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர், நாடுகாண் பயணி (இ. 1779)

👉1812 – வீர புரன் அப்பு, இலங்கை விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1848)

👉1858 – பிபின் சந்திர பால், இந்திய செயற்பாட்டாளர், கல்வியாளர் (இ. 1932)

👉1867 – மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற போலந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1934)

👉1879 – லியோன் திரொட்ஸ்கி, செஞ்சேனையைத் தோற்றுவித்த உருசியப் புரட்சியாளர் (இ. 1940)

👉1888 – சி. வி. இராமன், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (இ. 1970)

👉1909 – என். ஜி. ரங்கா, ஆந்திர அரசியல்வாதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1995)

👉1913 – சமர் முகர்ஜி, மேற்கு வங்க இடதுசாரி அரசியல்வாதி (இ. 2013)

👉1913 – அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 1960)

👉1918 – பில்லி கிரஹாம், அமெரிக்க எழுத்தாளர்

👉1922 – அழ. வள்ளியப்பா, தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1989)

👉1929 – எரிக் காண்டல், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க மருத்துவர்

👉1938 – டொனால்டு பிளெமிங், கனடிய வேதியியலாளர்

👉1939 – பார்பாரா இலிசுகோவ், American அமெரிக்கக் கணினி அறிவியலாளர்

👉1941 – எர்னஸ்ட் முத்துசாமி, குவாதலூப்பே-பிரான்சிய அரசியல்வாதி

👉1943 – மைக்கேல் ஸ்பென்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்

👉1943 – சில்வியா கார்ட்ரைட், நியூசிலாந்து அரசியல்வாதி

👉1954 – கமல்ஹாசன், தமிழக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி

👉1959 – சிறிநிவாஸ், இந்தியப் பாடகர்

👉1969 – நந்திதா தாஸ், இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர

👉1975 – வெங்கட் பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர்

👉1980 – கார்த்திக், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்

👉1981 – அனுசுக்கா செட்டி, இந்திய நடிகை


இன்றைய தின இறப்புகள்.


👉644 – உமறு இப்னு அல்-கத்தாப், இசுலாமியக் கலீபா (பி. 590)

👉1627 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர் (பி. 1569)

👉1836 – ஆ. குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1783)

👉1862 – பகதூர் சா சஃபார், முகலாயப் பேரரசர் (பி. 1775)

👉1913 – ஆல்பிரடு அரசல் வாலேசு, பிரித்தானிய உயிரியலாளர் (பி. 1823)

👉1947 – கோ. நடேசையர், இந்திய-இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1887)

👉1951 – என். சி. வசந்தகோகிலம், கருநாடக இசைப் பாடகி, நடிகை

👉1962 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்காவின் 39வது முதல் சீமாட்டி (பி. 1884)

👉1978 – ஜீவராஜ் மேத்தா, குசராத்து மாநிலத்தின் 6வது முதலமைச்சர் (பி. 1887)

👉1981 – வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட், அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1885)

👉1993 – திருமுருக கிருபானந்த வாரியார், இந்திய ஆன்மிக சொற்பொழிவாளர் (பி. 1906).

👉2000 – நிமலன் சௌந்தரநாயகம், இலங்கை அரசியல்வாதி (பி. 1950)

👉2000 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (பி. 1910)

👉2011 – ஜோ பிரேசியர், அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் (பி. 1944)

👉2014 – தோர்ப்சான் சிக்கிலேண்டு, நார்வே வேதியியலாளர் (பி. 1923)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉அக்டோபர் புரட்சி நாள் (உருசியா (அதிகாரபூர்வமற்றது), பெலருஸ், கிர்கிசுத்தான்)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.