வரலாற்றில் இன்று நவம்பர் 04.2021

 வரலாற்றில் இன்று நவம்பர் 04.2021


நவம்பர் 4  கிரிகோரியன் ஆண்டின் 308 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 309 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 57 நாட்கள் உள்ளன.


 இன்றைய தின நிகழ்வுகள்.


👉1576 – எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது.

👉1677 – பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர் வில்லியத்தைத் திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர்.

👉1847 – குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை இசுக்கொட்டிய மருத்துவர் யேம்சு சிம்ப்சன் கண்டுபிடித்தார்.

👉1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அமெரிக்கப் படையினரின் களஞ்சியச் சாலை ஒன்றை குண்டு வைத்துத் தகர்த்தன.

👉1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.

👉1890 – இலண்டனின் முதலாவது பாதாளத் தொடருந்து வழி அமைக்கப்பட்டது.

👉1918 – முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆத்திரியா-அங்கேரி சரணடைந்தது.

👉1921 – சப்பானியப் பிரதமர் அரா தக்காசி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

👉1922 – எகிப்தில், பிரித்தானியத் தொல்லியலாளர் ஆவர்டு கார்ட்டர் மன்னர்களின் சமவெளியில் துட்டன்காமனின் கல்லறைக்கான வழியைக் கண்டுபிடித்தார்.

👉1942 – இரண்டாம் உலகப் போர்: இட்லரின் ஆணையைக் கருத்தில் எடுக்காமல், மார்சல் இர்வின் ரோமெல் இரண்டாம் அல்-அலமைன் சண்டையில் பெரும் தோல்வியடைந்த தனது படைகளை விலக்க முடிவு செய்தார்.

👉1952 – அமெரிக்க அரசு தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பை நிறுவியது.

👉1956 – அக்டோபர் 23 இல் ஆரம்பமான அங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் அங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான அங்கேரியர்கள் கொல்லப்பட்டு இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.

👉1966 – இத்தாலி, புளோரன்சு நகரில் ஆர்னோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன. வெனிசு நகரம் மூழ்கியது.

👉1967 – எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு: நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

👉1970 – இலத்தீன் அமெரிக்காவின் முதலாவது மார்க்சியத் தலைவராக சால்வடோர் அயேந்தே சிலியின் அரசுத்தலைவராக பதவியேற்றார்.

👉1979 – ஈரானியத் தீவிரவாதிகள் தெகுரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.

👉1980 – ரானல்ட் ரேகன் அமெரிக்காவின் 40-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

👉1984 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில் சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.

👉1995 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இசுரேலியன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

👉2004 – ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 பிரான்சியப் படையினர் மற்றும் 3 ஐநா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

👉2008 – அமெரிக்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஆப்பிரிக்க அமெரிக்க வம்சாவழியினர் என்ற பெருமையை பராக் ஒபாமா பெற்றார்.

👉2010 – கியூபாவில் ஏரோ கரிபியன் வானூர்தி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 68 பேரும் உயிரிழந்தனர்.

👉2015 – பாக்கித்தான் லாகூர் நகரில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.

👉2015 – தெற்கு சூடானில் யூபா நகரில் சரக்கு வானூர்தி ஒன்று தரையில் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர்.


இன்றைய தின பிறப்புகள்.


👉1650 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (இ. 1702)

👉1845 – வாசுதேவ் பல்வந்த் பட்கே, இந்தியப் புரட்சியாளர் (இ. 1883)

👉1884 – ஜம்னாலால் பஜாஜ், இந்தியத் தொழிலதிபர் (இ. 1942)

👉1897 – ஜானகி அம்மாள், இந்தியத் தாவரவியலாளர் (இ. 1984)

👉1906 – ழான் ஃபில்லியொசா, பிரான்சியத் தமிழறிஞர் (இ. 1982)

👉1915 – வீ கிம் வீ, சிங்கப்பூரின் 4வது குடியரசுத் தலைவர் (இ. 2005)

👉1929 – சகுந்தலா தேவி, இந்தியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 2013)

👉1933 – சார்லசு காவோ, நோபல் பரிசு பெற்ற சீன இயற்பியலாளர்

👉1957 – டோனி அபோட், ஆத்திரேலியாவின் 28வது பிரதமர்

👉1969 – மேத்திவ் மெக்கானாகே, அமெரிக்க நடிகை

👉1972 – தபூ, இந்திய நடிகை

👉1983 – அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ், உருசிய வானியற்பியலாளர் (இ. 2014)

👉1991 – வித்யுலேகா ராமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை


இன்றைய தின இறப்புகள்.


👉1918 – வில்ஃபிரட் ஓவன், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1893)

👉1920 – உலூத்விக் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (பி. 1858)

👉1981 – திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1926)

👉1985 – டி. கே. இராமானுஜக் கவிராயர், தமிழறிஞர், புலவர் (பி. 1905)

👉1988 – கி. வா. ஜகந்நாதன், தமிழக இதழாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் (பி. 1906)

👉1988 – ஜேம்ஸ் இரத்தினம், ஈழத்து எழுத்தாளர். (பி. 1905)

👉1991 – மொகிதீன் பேக், இலங்கை திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1919)

👉1994 – கு. மா. பாலசுப்பிரமணியம், திரைப்பட பாடலாசிரியர் (பி. 1920)

👉1995 – இட்சாக் ரபீன், இசுரேலின் 5வது பிரதமர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)

👉1998 – மரியோன் தொனோவன், அமெரிக்கப் புதுமைப்புனைவாளர், தொழிலதிபர் (பி. 1917)

👉1999 – அப்துல் சமது, தமிழக அரசியல்வாதி (பி. 1926)

👉2008 – மைக்கேல் கிரைட்டன், அமெரிக்க மருத்துவர், இயக்குநர் (பி. 1942)

👉2012 – ஜேக்கப் சகாயகுமார் அருணி, தமிழக சமையல் கலை நிபுணர் (பி. 1974)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉ஒற்றுமை நாள் (உருசியா)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.