கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மின் விநியோகம் இடைநிறுத்தம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மின் விநியோகம் இடைநிறுத்தம்.

பல மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்குச் சிவப்பு பட்டியல் அனுப்பப்பட்ட போதிலும், தொடர்ந்தும் கட்டணத்தைச் செலுத்தாதவர்களின் மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். 

அது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- கொரோனாத் தொற்று நோயால் ஏற்படும் வருவாய் இழப்பைக் கருத்தில்கொண்டு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு சில நிவாரணங்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

 ஆனால், மாதாந்தக் கட்டணத்தைச் செலுத்தக்கூடியவர்கள் கூட அதைத் தொடர்ந்து செலுத்தவில்லை. கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மின்கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது. 

தொடர்ந்து மின்கட்டணம் செலுத்தாதவர்கள், செலுத்தத் தயக்கம் காட்டினால் தற்காலிகமாக மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். மேலும் ,எப்படியிருப்பினும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு முன்னர் சிவப்புப் பட்டியல் வழங்கப்படும்- என்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.