கொரோனாவை தடுக்க அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கொரோனாவை தடுக்க அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரை

அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரை கொரோனா வைரஸிற்கு எதிராக சிறப்பான செயல்திறனை கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 இதனை அடுத்து சந்தையில் அந்நிறுவன பங்குகளின் விலை அதிகரித்துள்ளது. மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிராவிர் மாத்திரையை உட்கொண்டால் கொரோனா தொற்று பாதிப்பால் மரணம் ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறைவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் கூடிய நிலை கூட பலருக்கு ஏற்படாது எனவும் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 இந்த முடிவுகள் மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாகவும், இது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும் அமெரிக்க மருத்துவத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

விரைவில் மெர்க் நிறுவனம் அமெரிக்காவில் இந்த மாத்திரையை அவசரகாலத்தில் பயன்படுத்த அனுமதி கோரி விண்ணபிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்க வாய்வழி உட்கொள்ளும் வகையிலான முதல் மருந்தாக மால்னுபிராவிர் மாத்திரை இருக்கும். 

மாத்திரையின் ஆய்வக முடிவுகள் நேர்மறையாக இருப்பது தெரியவந்த நிலையில் வெள்ளியன்று சந்தையில் மெர்க் நிறுவனப் பங்குகளின் மதிப்பு 12.3 விழுக்காடு அளவு உயர்ந்துள்ளது. 

அதே நேரத்தில், அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்கி வரும் மாடர்னா பங்குகளின் மதிப்பு 13 விழுக்காடு அளவிற்கும், ஃபைசரின் பங்குகள் ஒன்று புள்ளி மூன்று விழுக்காடும் சரிந்தன. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.