வரலாற்றில் இன்று அக்டோபர் 26.2021

 வரலாற்றில் இன்று அக்டோபர் 26.2021


அக்டோபர் 26  கிரிகோரியன் ஆண்டின் 299 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 300 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 66 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉740 – கான்ஸ்டண்டினோபில் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

👉 1341 – ஆறாம் ஜான் பைசாந்தியப் பேரரசராகத்த் தன்னை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் (1341–47) ஆரம்பமானது.

👉1377 – பொசுனியாவின் முதலாவது மன்னராக முதலாம் திவிர்த்கோ முடி சூடினார்.

👉1520 – புனித உரோமையின் பேரரசராக ஐந்தாம் சார்லசு முடிசூடினார்.

👉1640 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்லசு மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

👉1689 – ஆஸ்திரியாவின் இராணுவத் தலைவர் பிக்கொலோமினி வாந்திபேதி நோய் பரவாமல் தடுக்க இசுக்கோப்ஜி நகரை எரித்தார். இறுதியில் அவரே வாந்திபேதியால் இறந்தார்.

👉1775 – அமெரிக்கக் குடியேற்றங்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அமெரிக்கப் புரட்சியை அடக்க இராணுவத்துக்கு அதிகாரம் அளித்தார்.

👉1776 – அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு வேண்டி பெஞ்சமின் பிராங்கிளின் பிரான்சுக்குப் பயணமானார்.

👉1859 – வடக்கு வேல்சில் ரோயல் சார்ட்டர் என்ற கப்பல் மூழ்கியதில் 459 பேர் இறந்தனர்.

👉1863 – உலகின் மிகப் பழமையான காற்பந்துச் சங்கம் இலண்டனில் அமைக்கப்பட்டது.

👉1876 – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பிரித்தானிய அரசரால் எடுக்கப்பட்டது.

👉1905 – நோர்வே பிரிந்து சென்றதை சுவீடன் அங்கீகரித்தது.

👉1909 – சப்பானியப் பிரதமர் ஈட்டோ இரொபூமி மஞ்சூரியா, கார்பின் தொடருந்து நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

👉1912 – முதலாம் பால்கன் போர்: உதுமானியரால் ஆக்கிரமிக்கப்பட்ட தெசாலோனிக்கி நகரம் விடுவிக்கப்பட்டு கிரேக்கத்துடன் இணைக்கப்பட்டது. இதே நாளில் செர்பியப் படைகள் ஸ்கோப்ஜே நகரைக் கைப்பற்றின.

👉1917 – முதலாம் உலகப் போர்: கப்பொரெட்டோ சமரில் இத்தாலியப் படைகள் ஆத்திரியா-அங்கேரி, செருமனியப் படைகளுடன் மோதி பெரும் இழப்பை சந்தித்தன.

👉1917 – முதலாம் உலகப் போர்: இத்தாலி கபொரேட்டொ என்ற இடத்தில் செருமனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுடன் மோதி கடும் தோல்வியைச் சந்தித்தது.

👉1917 – முதலாம் உலகப் போர்: பிரேசில் மைய நாடுகளுக்கு எதிராகப் போரில் இறங்கியது.

👉1936 – முதலாவது மின்னியற்றி ஊவர் அணையில் முழுமையாக இயங்கியது.

👉1942 – இரண்டாம் உலகப் போர்: சான்டா குரூஸ் தீவுகளில் இரண்டு அமெரிக்க வான்படைக் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

👉1947 – சம்மு-காசுமீர் மன்னர் இந்தியாவுடன் தனது இராச்சியத்தை இணைக்கச் சம்மதித்தார்.

👉1947 – ஈராக்கிலிருந்து பிரித்தானிய இராணுவம் வெளியேறியது.

👉1955 – ஆஸ்திரியாவில் கடைசி கூட்டுப்படைகள் வெளியேறின. ஆஸ்திரியா நிரந்தர நடுநிலை நாடாகத் தன்னை அறிவித்தது.

👉1958 – பான் அமெரிக்கன் ஏர்வேய்சு போயிங் 707 இன் முதலாவது வணிக-நோக்குப் பறப்பை நியூயோர்க் முதல் பாரிசு வரை மேற்கொண்டது.

👉1967 – முகம்மத் ரிசா பகுலவி ஈரானின் பேரரசராகத் தன்னை அறிவித்து, பேரரசியாக தனது மனைவி ஃபாராவுக்கு முடிசூட்டினார்.

👉1968 – சோவியத் விண்ணோடி கியோர்கி பெரிகவோய் சோயூசு 3 விண்கலத்தில் நான்கு-நாள் பயணத்தை ஆரம்பித்தார்.

👉1977 – பெரியம்மை நோய் தாக்கிய கடைசி நோயாளி சோமாலியாவில் அடையாளம் காணப்பட்டார். உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.

👉1979 – தென் கொரியா அரசுத்தலைவர் பார்க் சுங்-கீ இராணுவத் தளபதி கிம் ஜே-கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

👉1985 – ஆத்திரேலிய அரசு உலுரூவின் உரிமையை உள்ளூர் பழங்குடியினரிடம் கையளித்தது.

👉1991 – யுகோசுலாவிய மக்கள் இராணுவம் சுலோவீனியாவில் இருந்து விலகியது.

👉1994 – யோர்தானும் இசுரேலும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

👉1994 – பெர்மாவின் கடைசித் தேற்றம் அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.

👉1995 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுலாமிய ஜிகாட் தலைவர் பாதி சிக்காகி மால்ட்டாவில் உள்ள விடுதி ஒன்றில் மொசாட் அமைப்பினரால் கொல்லப்பட்டார்.

👉2000 – ஐவரி கோஸ்ட்டின் அரசுத்தலைவர் இராபர்ட் கூயெய் பதவியிறக்கப்பட்டு லோரண்ட் பாக்போ தலைவரானார்.

👉2001 – ஐக்கிய அமெரிக்கா தேசப்பற்றுச் சட்டத்தை நிறைவேற்றியது.

👉2002 – மாஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்சினியத் தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

👉2003 – கலிபோர்னியாவில் இடம்பெற்ற தீயில் 15 பேர் கொல்லப்பட்டு 250,000 ஏக்கர், மற்றும் 2,200 வீடுகள் சான் டியேகோ நகரில் அழிந்தன.

👉2015 – 7.5 அளவு நிலநடுக்கம் ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைப் பகுதியைத் தாக்கியதில் 398 பேர் கொல்லப்பட்டு, 2,536 பேர் காயமடைந்தனர்.

👉2016 – இத்தாலியின் நடுப்பகுதியை 6.6 அளவு நிலநடுக்கம் தாக்கியது.

👉2019 – அமெரிக்கப் படையினர் சிரியா, இதுலிபில் நடத்திய தாக்குதலில் இசுலாமிய அரசுத் தலைவர் அபூ பக்கர் அல்-பக்தாதி தற்கொலை செய்து இறந்தார்.


இன்றைய தின பிறப்புகள்.


👉1841 – தியோடோர் வான் அப்போல்சர், ஆசுத்திரிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1886)

👉1873 – ஏ. கே. பசுலுல் ஹக், வங்கதேச-பாக்கித்தானிய அரசியல்வாதி (இ. 1962)

👉1883 – நெப்போலியன் ஹில், அமெரிக்க மெய்யியலாளர் (இ. 1970)

👉1890 – கணேஷ் சங்கர் வித்யார்த்தி, இந்திய இதழியலாளர், செயற்பாட்டாளர் (இ. 1931)

👉1892 – பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை அரசியல்வாதி (இ. 1950)

👉1902 – என்றியேட்டா கில் சுவோப், அமெரிக்க வானியலாளர் (இ. 1980)

👉1919 – முகம்மத் ரிசா ஷா பஹ்லவி, ஈரானின் அரசுத்தலைவர் (இ. 1980)

👉1920 – சாரா இலீ இலிப்பின்கோட், அமெரிக்க வானியலாளர்

👉1923 – இராம் பிரகாசு குப்தா, இந்திய அரசியல்வாதி, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் (இ. 2004)

👉1932 – சாரெகொப்பா பங்காரப்பா, கருநாடக முதலமைச்சர் (இ. 2011)

👉1933 – முருகேசு சுவாமிகள், ஈழத்து ஆன்மிகவாதி (இ. 2007)

👉1947 – இலரி கிளின்டன், அமெரிக்க அரசியல்வாதி

👉1947 – சாருமதி, ஈழத்து எழுத்தாளர் (இ. 1998)

👉1952 – லார்ஸ் பீட்டர் ஹான்சென், அமெரிக்கப் பொருளியலாளர்

👉1959 – ஏவோ மொராலெஸ், பொலிவியாவின் 80வது அரசுத்தலைவர்

👉1965 – மனோ, தென்னிந்தியத் திரைப்பட பாடகர்

👉1974 – ரவீணா டாண்டன், இந்தியத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர்

👉1985 – அசின், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

👉1991 – அமலா பால், தென்னிந்தியத் திரைப்பட நடிகை


இன்றைய தின இறப்புகள்.


👉899 – ஆல்பிரட், ஆங்கிலேய மன்னர் (பி. 849)

👉1764 – வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (பி. 1697)

👉1879 – அ. சந்திரசேகர பண்டிதர், மானிப்பாய் அகராதி தொகுத்து வெளியிட்ட ஈழத்துத் தமிழறிஞர்

👉1930 – வால்டெமர் ஆஃப்கின், உருசிய-சுவிசு மருத்துவர் (பி. 1860)

👉1957 – கெர்டி கோரி, நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (பி. 1896)

👉1974 – மிர்துலா சாராபாய், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1911)

👉2013 – பி. எஸ். மணிசுந்தரம், இந்தியக் கல்வியாளர் (பி. 1927)

👉2019 – தங்கேஸ்வரி கதிராமன், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர், அரசியல்வாதி (பி. 1952)

👉2019 – நானம்மாள், இந்திய யோகக்கலைப் பயிற்சியாளர் (பி. 1920)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉இணைப்பு விழா (சம்மு காசுமீர்)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.