வரலாற்றில் இன்று அக்டோபர் 20.2021

 வரலாற்றில் இன்று அக்டோபர் 20.2021


அக்டோபர் 20  கிரிகோரியன் ஆண்டின் 293 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 294 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 72 நாட்கள் உள்ளன.

 

இன்றைய தின நிகழ்வுகள்


1740 – மரீயா தெரேசா ஆஸ்திரியா, பிரான்சு, புருசியா, பவேரியா, சாக்சனி ஆகியவற்றின் அரசியாக முடிசூடினாள். ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் ஆரம்பமானது.

👉1803 – அமெரிக்க மேலவை லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது.

👉1818 – அமெரிக்காவிற்கும், ஐக்கிய இராசியத்திற்கும் இடையில் கனடா-அமெரிக்க எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

👉1827 – துருக்கிய, எகிப்தியப் படைகளை பிரித்தானீய, பிரெஞ்சு, உருசியக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.

👉1883 – பசிபிக் போரில் பெருவின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. பெருவின் தரப்பக்கா மாகாணம் சிலிக்கு வழங்கப்பட்டது.

👉1904 – சிலியும் பொலிவியாவும் தமது எல்லைகளை நிர்ணயிக்கும் அமைதி உடன்பாட்டை ஏற்றுக் கொண்டன.

👉1941 – கிறகுஜேவாச் படுகொலைகள்: செர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்சி செருமனியரால் கொல்லப்பட்டனர்.

👉1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் யுகோசுலாவியத் தலைநகர் பெல்கிரேட்டை செருமனியிடமிருந்து மீட்டது.

👉1944 – கிளீவ்லாந்து நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பேர் கொல்லப்பட்டனர்.

👉1947 – பாக்கித்தானும், ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவை ஏற்படுத்தின.

👉1952 – கென்யாவில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

👉1961 – சோவியத் ஒன்றியம் முதற்தடவையாக ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவும் நீண்ட தூரம் பாயும் ஏவுகணை சோதனை செய்தது.

👉1962 – சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோடு வரையான இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்களை ஆரம்பித்தது. இந்திய சீனப் போர் ஆரம்பிக்க இது வழிவகுத்தது.

👉1968 – அமெரிக்காவின் முன்னாள் முதலாவது சீமாட்டி ஜாக்குலின் கென்னடி கிரேக்கத் தொழிலதிபர் அரிசுடாட்டில் ஒனாசிசு என்பவரைத் திருமணம் புரிந்தார்.

👉1973 – இரண்டாம் எலிசபெத் மகாராணி சிட்னி ஒப்பேரா மாளிகையைத் திறந்து வைத்தார்.

👉1976 – மிசிசிப்பி ஆற்றில் ஜார்ஜ் பிரின்சு என்ற பயணிகள் கப்பல் சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 பயணிகள் இறந்தனர். 18 பேர் மட்டும் தப்பினர்.

👉1982 – மாஸ்கோ லூசினிக்கி அரங்கில் ஸ்பர்த்தாக், மற்றும் டச்சு ஆர்லெம் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு கால்பந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் உயிரிழந்தனர்.

👉1982 – இலங்கையில் முதலாவது அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. ஜே. ஆர். ஜெயவர்தனா 52.1% வாக்குகள் பெற்று முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவரானார்.

👉1991 – இந்தியாவின் உத்தரகாசியில் இடம்பெற்ற 6.8 அளவு நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.

👉1995 – கொழும்பு கொலன்னாவை பெற்றோலியக் கூட்டுத்தாபன எண்ணெய்த் தாங்கிகள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் பெரும் சேதம் ஏற்பட்டது, 21 பேர் கொல்லப்பட்டனர்.👉2001 – இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணிக் கட்சி தொடங்கப்பட்டது.

👉2004 – முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.

👉2011 – லிபிய உள்நாட்டுப் போர்: தேசிய இடைக்காலப் பேரவை போராளிகள் பதவியில் இருந்து அகற்றப்பட்ட அரசுத்தலைவர் முஅம்மர் அல் கதாஃபியை அவரது சொந்த நகரில் கைப்பற்றிப் படுகொலை செய்தனர்.


இன்றைய தின பிறப்புகள்.


👉1632 – கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேய கட்டிடக்கலைஞர் (இ. 1723)

👉1822 – தோமஸ் ஹியூக்ஸ், ஆங்கிலேய நீதிபதி (இ. 1896)

👉1854 – ஆர்தர் ராம்போ, பிரான்சியக் கவிஞர் (இ. 1891)

👉1859 – ஜான் டூயி, அமெரிக்க உளவியலாளர், மெய்யியலாளர் (இ. 1952)

👉1874 – எமில் போஸ், செருமானிய இயற்பியலாளர் (இ. 1911)

👉1884 – டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் 1-வது பிரதமர் (இ. 1952)

👉1891 – ஜேம்ஸ் சாட்விக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1974)

👉1894 – ஆலிவ் தோமசு, அமெரிக்க நடிகை (இ. 1920)

👉1904 – புபேசு குப்தா, இந்திய அரசியல்வாதி (இ. 1981)

👉1909 – மீ. கல்யாணசுந்தரம், தமிழக அரசியல்வாதி (இ. 1988)

👉1913 – கந்தையா திருஞானசம்பந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1995)

👉1917 – சே. மா. செல்லத்தம்பு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

👉1920 – வீராசாமி ரிங்காடு, மொரிசியசு நாட்டின் ஆளுனர் (இ. 2000)

👉1923 – தொ. மு. சி. ரகுநாதன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 2001)

👉1923 – வி. எஸ். அச்சுதானந்தன், கேரள மாநிலத்தின் 20வது முதலமைச்சர்

👉1925 – ஆர்ட் புச்வால்ட், அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2007)

👉1938 – க. சின்னத்தம்பி, ஈழத்துக் கல்வியியலாளர்

👉1946 – எல்ஃபிரெட் எலினெக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய எழுத்தாளர்

👉1951 – கிளாடியோ ரனெய்ரி, இத்தாலியக் கால்பந்து வீரர்

👉1954 – ந. செல்வராஜா, இலங்கை நூலகவியலாளர், ஆய்வாளர்

👉1956 – டேனி பாயில், ஆங்கிலேய இயக்குநர்

👉1957 – குமார் சானு, இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகர்

👉1958 – விக்கோ மோர்டென்சென், அமெரிக்க நடிகர்

👉1962 – சிறீதர் பிச்சையப்பா, இலங்கை மேடை, தொலைக்காட்சி நாடகக் கலைஞர் (இ. 2010)

👉1963 – நவ்ஜோத் சிங் சித்து, இந்தியத் துடுப்பாட்டக்காரர்

👉1964 – கமலா ஆரிசு, அமெரிக்க அரசியல்வாதி

👉1971 – ஸ்னூப் டாக், அமெரிக்க ராப் கலைஞர்

👉1974 – பா. விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர்

👉1977 – ரிச்சர்ட் ரிசி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

👉1978 – வீரேந்தர் சேவாக், இந்தியத் துடுப்பாளர்


இன்றைய தின இறப்புகள்.


👉1570 – யாவோ டி பாரோசு, போர்த்துக்கீச வரலாற்றாளர் (பி. 1496)

👉1631 – மைக்கேல் மேசுட்லின், செருமானிய வானியலாளர் (பி. 1550)

👉1936 – ஆனி சலிவன், அமெரிக்கக் கல்வியாளர் (பி. 1866)

👉1972 – ஆர்லோவ் சேப்ளே, அமெரிக்க வானியலாளர் (பி. 1885)

👉1984 – கார்ல் பெர்டினான்ட் கோரி, நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க உயிரியலாளர் (பி. 1896)

👉1984 – பால் டிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1902)

👉1997 – ஜீவா ஜீவரத்தினம், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1939)

👉2008 – ஸ்ரீதர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1933)

👉2011 – முஅம்மர் அல் கதாஃபி, லிபியத் தலைவர் (பி. 1942)

👉2014 – ராஜம் கிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1925)

👉2016 – ஜூன்கோ டபெய், சப்பானிய மலையேறி (பி. 1939)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉புரட்சி நாள் (குவாத்தமாலா)

உலகப் புள்ளியியல் நாள் (2020)

👉உலக எலும்புப்புரை நாள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.