வரலாற்றில் இன்று அக்டோபர் 03.2021

 வரலாற்றில் இன்று அக்டோபர் 03.2021


அக்டோபர் 3  கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉கிமு 52 – கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.

👉கிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர்.

 👉382 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார்.

👉1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினார்.

👉1739 – உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் உருசியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

👉1789 – சியார்ச் வாசிங்டன் அந்த ஆண்டின் நன்றியறிதல் நாளை அறிவித்தார்.

👉1833 – இலங்கையில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.[1]

👉1863 – நவம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமையை நன்றியறிதல் நாளாக அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அறிவித்தார்.

👉1908 – பிராவ்தா செய்திப்பத்திரிகை லியோன் திரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளியிடப்பட்டது.

👉1912 – அமெரிக்கப் படைகள் நிக்கராகுவாவின் கிளர்ச்சியாளர்களை வென்றன.

👉1918 – மூன்றாம் போரிசு பல்கேரியாவின் மன்னனாக முடிசூடினான்.

👉1929 – செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு யுகோசுலாவியா எனப் பெயரிடப்பட்டது.

👉1932 – ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

👉1935 – இத்தாலி எதியோப்பியாவினுள் ஊடுருவியது. இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர் ஆரம்பமானது.

👉1942 – செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது 85 கிமீ உயரத்துக்கு சென்றது.

👉1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் கிரேக்கத்தில் லிஞ்சியாதெசு கிராமத்தில் 92 பொதுமக்களைக் கொன்றனர்.

👉1952 – ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.

👉1962 – சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி சீரா ஒன்பது மணி நேரத்தில் ஆறு தடவைகள் பூமியைச் சுற்றினார்.

👉1963 – ஒண்டுராசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது.

👉1978 – பின்லாந்தில் வான்படை வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதைல் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர்.

👉1981 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.

👉1985 – அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.

👉1986 – டாஸ்க் என்ற மீக்கடத்து சுழற்சியலைவி கனடாவில் சாக் ரிவர் ஆய்வுகூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

👉1989 – பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

👉1990 – செருமானிய மீளிணைவு: செருமானிய சனநாயகக் குடியரசு முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் செருமனி என்ற பெயரில் இணைந்தன.

👉1993 – சோமாலியாவின் இராணுவத் தலைவர் முகம்மது பரா ஐடிடு என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.

👉2001 – வங்காளதேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் காலிதா சியாவின் வங்காளதேசக் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.

👉2007 – மன்னார் மாவட்டம், விளாத்திக்குளம், முள்ளிக்குளம் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை இராணுவத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

👉2010 – 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் தில்லி நகரில் ஆரம்பமாயின.

👉2013 – இத்தாலியின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.

👉2015 – ஆப்கானித்தானில் குண்டூசு மருத்துவமனை மீது வான் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.


இன்றைய தின பிறப்புகள்.


👉1846 – பிளத்தோன் போரெத்சுகி, உருசிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1907)

👉1849 – திமித்ரி துபியாகோ, உருசிய வானியலாளர் (இ. 1818)

👉1854 – எர்மேன் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (இ. 1920)

👉1917 – பீட்டர் கெனமன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1997)

👉1919 – ஜேம்ஸ் எம். புக்கானன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2013)

👉1930 – மார்வின் டி. கிரார்டோ, அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2015)

👉1932 – வி. பி. இராமன், தமிழக அரசியல்வாதி (இ. 1991)

👉1940 – முரு. சொ. நாச்சியப்பன், மலேசிய எழுத்தாளர்

👉1943 – குருசரண் தாஸ், இந்திய எழுத்தாளர்

👉1945 – சேடபட்டி இரா. முத்தையா, தமிழக அரசியல்வாதி

👉1954 – சத்யராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர்

👉1957 – இராபர்ட்டோ செவெதோ, உலக வணிக அமைப்பின் 6வது தலைவர்

👉1985 – அரோள் கரோலி, இந்திய இசையமைப்பாளர்

👉1988 – அலிசியா விகண்டேர், சுவீடிய நடிகை


இன்றைய தின இறப்புகள்.


👉1226 – அசிசியின் பிரான்சிசு, இத்தாலியப் புனிதர் (பி. 1181)

👉1867 – எலியாஸ் ஓவே, தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1819)

👉1896 – வில்லியம் மோரிஸ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1834)

👉1923 – கடம்பினி கங்கூலி, இந்திய மருத்துவர் (பி. 1861)

👉1932 – மேக்சு வுல்ஃப், செருமானிய வானியலாளர் (பி. 1863)

👉1954 – வேரா பெதரோவ்னா கசே, உருசிய வானியலாளர் (பி. 1899)

👉1962 – கந்தையா கனகரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1892)

👉1966 – ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட், சுவீடிய இயற்பியலாளர் (பி. 1896)

👉1995 – ம. பொ. சிவஞானம், தமிழக எழுத்தாளர், அரசியல்வாதி (பி. 1906)

👉1999 – மாரி. அறவாழி, தமிழக எழுத்தாளர் (பி. 1935)

👉1999 – அக்கியோ மொறிட்டா, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1921)

👉2009 – எஸ். இராமச்சந்திரன், இலங்கையின் மலையக ஓவியர் (பி. 1942)

👉2011 – ஆ. கந்தையா, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1928)

👉2015 – ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி (பி. 1936)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉மீளிணைவு நாள் (செருமனி)விடுதலை நாள் (ஈராக், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1932)

👉தேசிய உருவாக்க நாள் (தென் கொரியா)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.