டுபாயில் இருந்து சூட்சமமாக கடத்தப்பட்ட 16 கிலோ தங்கம் கண்டுபிடிப்பு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

டுபாயில் இருந்து சூட்சமமாக கடத்தப்பட்ட 16 கிலோ தங்கம் கண்டுபிடிப்பு 


இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் நேற்று பெரிய அளவிலான தங்க கடத்தல் மோசடி ஒன்றை கண்டுபிடித்தனர். 

இந்த பாரிய தங்க கடத்தல் ஒரு போலியான வர்த்தக பெயரில் விமான சரக்கு பகுதியில் கொரியர் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் நகரத்திலிருந்து வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் மின் இயந்திரங்களின் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுவதாகக் தெரிவித்து 16 கிலோ தங்கம் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது.

 இந்த பொருட்களின் உட்புற பாகங்கள் தங்கத்தால் தயாரிக்கப்பட்டு அதில் பொருத்தப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த தங்கத்தின் சந்தை மதிப்பு சுமார் 220 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டவிரோத இறக்குமதி தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.