ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு? 


நாட்டில் ஒரு கிலோ பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவுக் குழு ஒப்புக்கொண்டுள்ளது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக இறுதித் தீர்மானத்தைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

 ஒரு கிலோ பால் மாவை 350 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திற்கு முன்மொழியப்பட்டதாகவும் நாட்டில் டொலர் பற்றாக்குறை நிலவுவதால் தற்போது பால்மா இறக்குமதியாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி யுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ பால் மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க அனுமதி கிடைத் துள்ளது என்றும் தற்போதைய நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு இன்னும் ஆறு மாதங்களில் பால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் என்றும் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.