2020 சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் சந்தேகங்கள் இருப்பின் அழைக்கலாம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 2020 சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் சந்தேகங்கள் இருப்பின் அழைக்கலாம்.

நேற்று வெளியான 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் கேள்விகள் இருந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெறலாம். 

அதன்படி, 011 2 784 208, 011 2 784 537, 011 3 140 314 அல்லது ஹொட்லைன் எண் 1911 ஐ அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெறலாம் என்று திணைக்களம் கூறியுள்ளது. 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

 இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 622,352 பரீட்சார்த்திகள் 4,513 பரீட்சை நிலையங்களில் தோற்றியிருந்தனர். 

அதன்படி, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் https://ift.tt/1CADP7G ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களைப் பார்வையிட்டு, பரீட்சார்த்திகளின் சரியான பரீட்சை சுட்டெண்ணை உள்ளிட்டு முடிவுகளைப் பெற முடியும். 

நாட்டில் நிலவும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு பரீட்சையின் அழகியல் பாடங்களின் செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவில்லை. 

ஏனைய பாடங்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்ட பின், அழகியல் பாடங்களில் செய்முறைப் பரீட்சைகள் நடத்தப் படவுள்ளன. 

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளின் பரீட்சை முடிவுகளும் எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட அதிபர் களுக்கு வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக் களம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வி அமைச்சர் இன்று விஷேட அறிக்கை அளிக்கவுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.