மக்களே அவதானம். நாளை நமது வீடுகளிலும் இதுபோன்று நடக்கலாம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மக்களே அவதானம். நாளை நமது வீடுகளிலும் இதுபோன்று நடக்கலாம்.

இணையவழி ஊடாக அறிமுகமாகிய காதலனுக்கு தனது நிர்வாண வீடியோக்களை அனுப்பி தனது பெற்றோ தெரிய வந்ததையடுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சிறுமி ஒருவரை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் காப்பாற்றியுள்ளது. 

15 வயதுடைய இந்த பாடசாலை மாணவி கம்பஹா பாடசாலையொன்றில் கல்வி கற்று வருகின்றார். பாடசாலைக் கல்வியில் ஈடுபட்டிருந்த குறித்த மாணவி கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுடன் இணையவழி ஊடாக அறிமுகமாகி, காதல் வலையில் சிக்கி, தொலைபேசியின் ஊடாக அவனின் கோரிக்கைக்கு இணங்க தனது நிர்வாண வீடியோக்களை அவனுக்கு அனுப்பியுள்ளாள். 

சிறிது காலங்களின் பின்னர், தன்னுடனான காதல் உறவை முறித்துக் கொண்டதால் கோபமடைந்த 19 வயது காதலன் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு சிறுமியின் குறித்த வீடியோவை அனுப்பியுள்ளான். 

இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேக நபர் கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். 

அப்போதுதான் அந்த சிறுமி தன் காதலனை முதல் தடவையாக நேரடியாக பார்த்துள்ளாள். அவன் அங்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு வீடியோவை அழித்து விடுவதாக கூறி விட்டு சென்றுள்ளான். 

ஆனால், குறித்த சந்தேக நபர் மீண்டும் அந்த வீடியோக்களை அனுப்பத் தொடங்கியதால், சிறுமியின் பெற்றோர் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரியிடம் முறைப்பாடு செய்துள்ளனர். 

அதன்படி, பொலிஸ் குழு ஒன்று கண்டிக்கு சென்று குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். அவன் கைது செய்யப்பட்ட நேரத்தில், அந்த சிறுமியின் நிர்வாண காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை தயாரித்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது குறித்த சந்தேக நபர் மேலதிக கல்விக்காக ஜப்பான் செல்வதற்கு விசா பெற்றிருந்த ஒருவர் என்பதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

 இதன்மூலம் விரக்தி அடைந்த சிறுமி தற்கொலைக்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் காப்பாற்றப்பட்டுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.