ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் ஒளிப்பரப்புக்கு தடை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் ஒளிப்பரப்புக்கு தடை.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தாலிபன் அமைப்பினால் கைப்பற்றப்பட்டது.

 ஆப்கன் கைப்பற்றப்பட்டபோதே அங்கு கலை, கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

 அதற்கேற்றார் போல், பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அவசியமில்லை என தாலிபன் கலாசார அமைப்பின் துணைத் தலைவர் அகமதுல்லா வாசிக் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 

அந்த அறிவிப்புக்கு சர்வதேச அளிவில் கண்டனக் குரல்கள் எழுந்தன.தாலிபான் எச்சரிக்கைஅதைதொடர்ந்து, தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.

போட்டிகளின்போது சியர் லீடர்ஸாக பெண்கள் நடனமாடுவது, மைதானத்தில் பார்வையாளராக பெண்கள் அமர்ந்திருப்பது போன்ற காரணங்களால் இந்த தடை உத்தரவை தாலிபான் பிறப்பித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் ஒளிப்பரப்புக்கு தடைஆப்கன் பத்திரிக்கையாளர் ட்வீட்இதுதொடர்பாக அந்நாட்டின் ஊடகவியலாளர் ஃபாவத் அமன் தனது ட்விட்டர் பக்கத்தில்," தாலிபான் மைதானத்தில் பெண்கள் நடனமாடுவதாலும், பார்வையாளராக இருப்பதாலும் ஐபிஎல் போட்டியை ஒளிப்பரப்பக் கூடாது என எச்சரித்துள்ளனர். 

தாலிபான்கள் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடைவிதித்திருப்பது மிகவும் நகைப்பிற்குரியது. " எனப் பதிவிட்டுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 
👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.