தூத்துக்குடி கடற்பரப்பின் ஊடாக பெருமளவு இலங்கை பிரஜைகள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்- ஆட்கடத்தலின் முக்கிய சூத்திரதாரி கைது

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 தூத்துக்குடி கடற்பரப்பின் ஊடாக பெருமளவு இலங்கை பிரஜைகள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்- ஆட்கடத்தலின் முக்கிய சூத்திரதாரி கைது

தூத்துக்குடி கடற்பரப்பின் ஊடாக 100 இலங்கையர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளனர் என்பது விசாரணையொன்றின் போது தெரியவந்துள்ளதாக தமிழ்நாட்டின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சட்டவிரோதமாக ஆட்களை கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டவர் என்றசந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை கைதுசெய்து விசாரித்தவேளை இந்த தகவல் கிடைத்துள்ளது என கியுபிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 ஸ்டார்வின் என்ற சந்தேகநபரே இதனை தெரிவித்துள்ளார். நாட்டு படகில் ஐந்து தடவை இலங்கையலிருந்து பலர் தூத்துக்குடி வந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 இவ்வாறு வந்தவர்களில் அனேகமானவர்கள் மங்களுர் சென்றுள்ளனர் வெளிநாடு செல்வதே அவர்களின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ள ஸ்டர்வினே இலங்கை தமிழர்கள் தூத்துக்குடி ஊடாக தமிழ்நாட்டிற்குள் நுழைய உதவும் திட்டத்தின் முக்கிய சூத்திரதாரி என கியுபிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து இலங்கை தமிழர்கள் கடல்மார்க்கமாக நுழைவதை தடுப்பதற்காக கடலிலும் கடலோர கிராமங்களிலும் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பொலிஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ள இந்திய அதிகாரியொருவர் ஸ்டர்வின் கைதுசெய்யப்பட்டுள்ளமை முக்கியமான திருப்புமுனை இந்தியாவை எந்த கிளர்ச்சி நடவடிக்கைக்கும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

கனடாவிற்கு செல்வதற்காக அசோக்குமார் காசிவிஸ்வனாதன் என்ற இரு முகவர்களிற்கு இலங்கையை சேர்ந்தவர்கள் பெருமளவிற்கு பணத்தை வழங்கியுள்ளனர் என்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.