6 மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணம் செலுத்தவில்லையெனில் நீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

6 மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணம் செலுத்தவில்லையெனில் நீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

ஆறு மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணத்தைச் செலுத்தாத சுமார் 73ஆயிரம் வாடிக்கையாருக்கான நீர் விநியோகத்தை நிறுத்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தயாராகி வருகிறது.

 நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சின் தீர்மானத் துக்கமைய இந்நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய தொகை 145 கோடி ரூபாவாகும். 

எனினும் நுகர்வோர் தமது பட்டியல் கொடுப்பனவைச் செலுத்தாததால் சபை 800 கோடி ரூபாவை இழந்துள்ளது. 6 மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணங்களைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

 குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதன் பின் சுமார் 100 வாடிக்கையாளர்கள் கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. இதேவேளை சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியால், நாடு முழுவதும் உள்ள பல ஹோட்டல்களும் நீர் கட்டணத் தைச் செலுத்தவில்லை. 

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு மாதந்தோறும் 2 பில்லியன் ரூபா செலவு ஏற்படுவதால் வாடிக்கையா ளர்கள் தமது கட்டணங்களை விரைவாகச் செலுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 
👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.