வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வீதி சமிக்ஞைகள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வீதி சமிக்ஞைகள்.

வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வீதி சமிக்ஞைகள் , பாதுகாப்பு விளக்குகள், எச்சரிக்கை விளக்குகள் போன்றவை உடனடியாக நிறுவுமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் சமிந்த அதலுவகே, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் மற்றும் அனைத்து மாகாண பணிப்பாளர்களுக்கு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆலோசனை வழங்கினார்.

 போக்குவரத்து கட்டுப்பாட்டு சமிக்ஞைகளுக்காக உரிய ஊழியர்களை ஈடுபடுத்துமாறும் வேகத்தை கட்டுப்படுத்த தற்காலிக வீதித் தடைகளை அமைக்குமாறும் அமைச்சர் மேலும் அறிவுறுத்தினார். 

2021-09-19 அன்று சூம் தொழில்நுட்பத்தில் மூலம் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். வீதி அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்ககாக தான் கண்காணிப்பு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஆபத்தான இடங்கள் தொடர்பாக சரியான எச்சரிக்கை சமிக்ஞைகள் சில இடங்களில் முறையாக நிறுவப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

அத்தோடு வேகத்தடைகள் கூட அமைக்கப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். வீதி அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்கான எச்சரிக்கை சமிக்ஞைகள் மற்றும் வீதி சமிக்ஞைகளை ஒரு வாரத்திற்குள் உடனடியாக அமைக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறிவுறுத்தினார். 

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், பாரிய அபிவிருத்திகளை போன்றே பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் முன்னுரிமை வழங்கி செயற்படவேண்டும் என்றார். 

அதனால் சகல பொறியியலாளர்கள், சகல வீதி அபிவிருத்தியுடன் தொடர்புள்ள தரப்பினர் மற்றும் ஒப்பந்தக்காரர்களை இது தொடர்பில் அறிவூட்டுமாறும் அமைச்சர் குறிப்பிட்டார். ஊடகப் பிரிவு, நெடுஞ்சாலை அமைச்சு. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.