மதுக்கடைகளைத் திறக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 மதுக்கடைகளைத் திறக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.

அமைச்சர் நாமல் மதுக்கடைகளைத் திறக்க அரசாங்கம் தீர்மானிக்க வில்லை என்றும் யார் அனுமதி வழங்கியது என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

 "நாட்டைத் திறக்க ஒரு நிமிடம் இருக்கும் போது மதுக்கடை நிரம்பினால், அதைத் தாண்டி நாம் எங்கு செல்கிறோம் என்பதை இருமுறை யோசிக்க வேண்டும்" என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 தங்காலையில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மதுக்கடைகள் திறப்பது குறித்து தவறான செய்தி பரவியுள்ளது. 

என் கருத்துப்படி, கொவிட் தடுப்புக் குழுவோ அல்லது அரசாங்கமோ அத்தகைய தீர்மானத்தை எடுக்கவில்லை. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப கொரோனா தொற்றைக் குறைக்கும் நோக்கில் தான் கொவிட் குழு தீர்மானம் எடுக்கும். 

மதுக்கடையைத் திறப்பது குறித்து கொவிட் குழு எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை. எவ்வளவு தான் பொருளாதாரக் கஷ்டங்கள் இருந்தாலும் கூலி வேலை இல்லை என்று சொன்னாலும் பயணக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், மதுக்கடைகளைத் திறந்ததும் நீண்ட வரிசைகள் இருந்ததை அவதானிக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.