உ.பி-யில் மீண்டும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
உ.பி-யில் மீண்டும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உ.பியில் உறவினரின் திருமணத்திற்குச் சென்றபோது அவரை காரில் கடத்திச் சென்று மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காகக் கடந்த 13ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோருக்கு வந்துள்ளார். 

பின்னர் திருமண விழா முடிந்து டெல்லி செல்வதற்காக அருகே பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது, அங்கு காரில் வந்த மூன்று பேர், பிஜ்னோர் நகரில் இறக்கிவிடுவதாகக் கூறி அவரை ஏமாற்றி காரில் ஏற்றியுள்ளனர். 

காரில் செல்லும்போது கத்தியைக் காட்டி மூன்று பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் வழியிலேயே அந்த பெண்ணை இறக்கிவிட்டுள்ளனர். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நாங்கல் சோதி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றார். அப்போது போலிஸார் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ளனர். பின்னர் முன்னாள் எம்.பி. பரந்தேந்து சிங் தலையிட்ட பிறகு போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.