அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்தே தனியார் மருத்துவமனைக்கு கைக்குண்டு கொண்டு செல்லப்பட்டது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்தே தனியார் மருத்துவமனைக்கு கைக்குண்டு கொண்டு செல்லப்பட்டது.

சந்தேக நபர் வாக்குமூலம் நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் கழிப் பறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டை கொழும்பு 7 விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்தின் மேசை இலாச்சி ஒன்றிலிருந்து கொண்டு வந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த சம்பவம் தொடர்பாகத் திருகோணமலை உப்புவெளிப் பகுதியில் வசிக்கும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியரான குறித்த சந்தேக நபர் கொழும்பு குற்றப் பிரிவினரால் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகிறார். 

அவர் வழங்கிய அறிக்கையின்படி இந்த உண்மைகள் தெரியவந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

குறித்த சந்தேக நபர் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் கொழும்பு 07 இல் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை திருத்தச் சென்ற போது அங்கு அமைந்துள்ள அறையின் மேசை இலாச்சியிலிருந்து இந்தக் கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகளை கண்டெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

 அதன்படி சந்தேக நபர் வெடிக்கும் நிலையில் உள்ள கைகுண்டை எடுத்ததாகவும், துப்பாக்கி ரவைகளை அவருடன் இருந்த ஏனைய நண்பர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியா கியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

 அதன்படி, சில புலனாய்வாளர்கள் நேற்று பிற்பகல் கொழும்பு 07இல் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லம், மகாவ மற்றும் வெலிகந்தவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்று வெடி பொருட்கள் இருப்பதாக தேடி பார்த்ததாக தெரியவந்துள்ளது. 

தற்போது குறித்த வீட்டில் அமைச்சரவை அமைச்சர் வசித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர் உத்தியோகபூர்வ இல்லத்தில் குடியேறுவதற்கு முன்பே கைகுண்டு மற்றும் துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக் கப்பட்டதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் கடந்த 15 ஆம் திகதி கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

 இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் சந்தேக நபரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.