கருப்பு பூஞ்சை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் பட்டியல் வெளியானது..!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

கருப்பு பூஞ்சை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் பட்டியல் வெளியானது..!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் மத்தியில், கருப்பு பூஞ்சை நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த ஜுன் மாதம் முதல் படிப்படியாக அதிகரித்து வருவதை, சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது. 

இதன்படி, கடந்த ஜுன் மாதம் முதல் இதுவரையான காலம் வரை 12 கருப்பு பூஞ்சை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பூஞ்சை திணைக்கள விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 🔺ஜுன் மாதம் 💉இரத்தினபுரி வைத்தியசாலையில் 02 நோயாளர்கள்

 🔺ஜுலை மாதம் 💉திருகோணமலை வைத்தியசாலையில் ஒரு நோயாளர்

 🔺ஆகஸ்ட் மாதம் 💉கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 02 நோயாளர்கள்

 🔺செப்டம்பர் மாதம் 💉கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 02 நோயாளர்கள் 

💉இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 01 நோயாளர் 

💉கராபிட்டி போதனா வைத்தியசாலையில் 01 நோயாளர் 

💉களுபோவில போதனா வைத்தியசாலையில் 01 நோயாளர் கொவிட் தொற்றுக்குள்ளாகும் நீரிழிவு நோயாளர்கள் உடலிலுள்ள சீனியின் அளவை 100 வீதம் சமநிலையாக வைத்திருப்பது கட்டாயமானது என விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 அடையாளம் காணப்பட்ட அனைத்து கருப்பு பூஞ்சை நோயாளர்களும் நீரிழிவு நோய் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளவர்கள் என அவர் சுட்டிக்காட்டினார். 

நீரிழிவு நோய் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு, சீனியின் அளவை உரிய வகையில் பேணாதவர்களே, கருப்பு பூஞ்சை நோய் தொற்றை எதிர்நோக்கியுள்ளனர் என மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பூஞ்சை திணைக்கள விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.