அரிசி வகைகள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கலாம்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
 அரிசி வகைகள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கலாம்

நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கூட்டுறவு அமைச்சு என்பன அரிசியின் கட்டுப்பாட்டு வர்த்தமானி அறிவிப்பை திருத்த தீர்மானித்துள்ளன. 

இதற்கமைய சம்பா மற்றும் கீரி சம்பா ஆகியவற்றின் கட்டுப்பாட்டு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் பச்சரிசி மற்றும் நாட்டரிசி என்பவற்றின் விலைகளைத் திருத்தாதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி சம்பா அரிசியின் விலையை ஒரு கிலோ 103 ரூபாவிலிருந்து 120 ரூபாவாக உயர்த்த முன்மொழியப் பட்டுள்ளது. 

கீரி சம்பாவின் கட்டுப்பாட்டு விலையை ஒரு கிலோ 125 ரூபாவிலிருந்து 145 ரூபாவாக அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்ட பின் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.