சீனி இறக்குமதிக்கு அனுமதி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
சீனி இறக்குமதிக்கு அனுமதி.

சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்தார்.

 சீனி இறக்குமதிக்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நிதி அமைச்சினூடாக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

சீனி இறக்குமதிக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அறிவிப்பு வௌியாகியுள்ளது. இதனால் அதிக விலையில் சீனி விற்பனை செய்யப்பட்டமையால், சீனிக்கான கட்டுப்பாட்டு விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, தற்போது கையிருப்பிலுள்ள சீனி, எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கான நுகர்விற்கு போதுமானது என கூட்டுறவு மற்றும் நுகர்வோர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

 அதற்கமைய, 1,50,000 மெட்ரிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.