இளம்பெண்களின் நிலையை மோசமாக்கும் இன்ஸ்டாகிராம்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இளம்பெண்களின் நிலையை மோசமாக்கும் இன்ஸ்டாகிராம்!

சமூக ஊடங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் இளம் பெண்களின் நிலையை மோசமாக்குவதாகவும் அவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் பேஸ்புக் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இன்றைய இளம் தலைமுறையினர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடங்களில் மூழ்கி கிடப்பதாக பரவலாகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

இந்த குற்றச்சாட்டில் உண்மையும் இல்லாமல் இல்லை. அளவுடன் சமூக ஊடகத்தை பயன்படுத்துவதில் ஆபத்து இல்லை. அதேவேளையில், சமூக ஊடகத்துக்கு அடிமையாவது மன ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

 இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி பயன்பாடு தொடர்பான ஒரு உள் ஆய்வை நடத்தியது. இதில், இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவது மூலம் இளம் வயதினரின் மனநலம் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

 32 சதவிகித இளம் பெண்கள் தங்கள் உடலைப் பற்றி மோசமாக உணர்ந்தபோது, இன்ஸ்டாகிராம் அவர்களை மேலும் மோசமாக உணர வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட உள் ஆராய்ச்சியில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளதாக தகவல்யை ஆராய்ந்து வால்ஸ்டீரிட் ஜர்னல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த குறைந்த அளவிலான டீன் ஏஜ் பெண்கள், இன்ஸ்டாகிராம் பயன்பாடு காரணமாக தற்கொலை எண்ணம் தோன்றியதாக கூறியுள்ளது ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ளது. 

பிற சமூக ஊடகங்களை விட இன்ஸ்டாகிராமை அதிக அளவில் இளம் தலைமுறையினர் பயன்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராம் பயனாளர்களில் 40 சதவீதத்துக்கும் மேலானவர்கள் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.