விசேட வைத்தியர் விடுத்த கோரிக்கையைத் தவறாகப் புரிந்துக் கொண்ட கர்ப்பிணி தாய்மார்கள்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

விசேட வைத்தியர் விடுத்த கோரிக்கையைத் தவறாகப் புரிந்துக் கொண்ட கர்ப்பிணி தாய்மார்கள்

வயிற்றில் வளரும் கருவை கலைப்பதற்கு முயல்கின்றனர்- மருத்துவர் சனத் லெனரோல் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வரை கர்ப்பம் தரிப்பதனை ஒருவருடம் தாமதப்படுத்துமாறு அண்மையில் விசேட வைத்தியர் கோரிக்கை விடுத்திருந்தார்.

 அந்த கோரிக்கையைத் தவறாகப் புரிந்துக் கொண்ட கர்ப்பிணி தாய்மார்கள் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வைத்தியர்களிடம் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளனர் என மருத்துவர்சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

 இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் பலர் தங்கள் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வைத்தியர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வரை கர்ப்பம் தரிப்பதனை ஒருவருடம் தாமதப்படுத்துமாறு அண்மையில் விசேட வைத்தியர் கோரிக்கை விடுத்திருந்தார்.

 அந்த கோரிக்கையைத் தவறாகப் புரிந்துக் கொண்டமையின் காரணமாகக் கர்ப்பிணி தாய்மார்கள் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கை சட்டத்திற்கமைய தாயின் உயிருக்கு ஆபத்தாக இருந்தால் மாத்திரமே கரு கலைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று உலகிற்கு வந்த புதிய நோயாகும். உலகம் முழுவதும் அதன் செயற்பாடு பற்றிய வரையறுக்கப்பட்ட தரவுகள் மாத்திரமே இன்னமும் உள்ளது. 

மேலும் ஒரு வருடத்திற்குள் விஞ்ஞானிகள் அதற்கு புதிய தடுப்பூசி அல்லது மருந்தை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

ஒருவருட கர்ப்பத்தைத் தாமதப்படுத்துவது தாய்க்கும் கருப்பையில் வளரும் குழந்தைக்கும் நன்மையை ஏற்படுத்தும் என நிபுணர் தனது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருந்தார். 

இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் உடனடியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் வயிற்றில் வளரும் குழந்தை அல்லது தாய் கொரோனா தொற்றினாலும் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்ள முடியும் என மகளிர் வைத்திய நிபுணர் சனத் லெனரோல் மேலும் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3mx68BI https://ift.tt/2Wy9Ct0 https://ift.tt/3mS8paG
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.