விபத்துக்குள்ளாகி வீதியில் கிடந்த பிரபல நடிகர் - உதவி செய்யாத பொதுமக்கள்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 விபத்துக்குள்ளாகி வீதியில் கிடந்த பிரபல நடிகர் - உதவி செய்யாத பொதுமக்கள்

விபத்தில் சிக்கி வீதியில் கிடந்த நடிகர் சாய் தரம் தேஜுக்கு அந்த வழியாக சென்றவர்கள் யாரும் உதவி செய்யவில்லை. 

சாய் தரம் தேஜ். தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர்.அவர் தான் புதிதாக வாங்கிய ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றபோது விபத்துக்குள்ளாகினார். இதில் காயம் அடைந்த அவர் சுயநினைவை இழந்து சாலையில் கிடந்திருக்கிறார். 

ஆனால் அந்த வழியாக சென்றவர்களுக்கு அடிபட்டு கிடப்பது நடிகர் சாய் தரம் தேஜ் என்று தெரியவில்லை. மேலும் யாருமே அவருக்கு உதவி செய்யாமல் கடந்து சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. 

இந்நிலையில் அங்கிருந்த ஒரு ஷாப்பிங் மாலில் வேலை செய்யும் அப்துல் என்பவர் சாய் தரம் தேஜ் சாலையில் கிடப்பதை பார்த்து அவர் தன் நண்பர் ஆதீஃபின் உதவியுடன் சாய் தரம் தேஜை பத்திரமாக தூக்கி சாலையோரம் படுக்க வைத்து, தண்ணீர் கொடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸுக்கு போன் செய்திருக்கிறார்.

ஆம்புலன்ஸ் வந்த பிறகு அப்துல் மற்றும் ஆதீஃப் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். தான் உதவி செய்தது நடிகர் சாய் தரம் தேஜுக்கு என்பது அப்துலுக்கு தெரியாது.வீட்டிற்கு சென்ற அப்துலை போலீசார் அணுகி விபரம் தெரிவித்து, பாராட்டியிருக்கிறார்கள்.

இதற்கிடையே ஓவர் ஸ்பீடாக சென்றதாக சாய் தரம் தேஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சாய் தரம் தேஜ் பற்றி அறிந்தவர்களோ, யாராவது அடிபட்டுக் கிடந்தால் தயவு செய்து உதவி செய்யுங்கள் என்று சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3mx68BI https://ift.tt/2Wy9Ct0 https://ift.tt/3mS8paG
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.