வரலாற்றில் இன்று செப்டம்பர் 23.2021

 வரலாற்றில் இன்று செப்டம்பர் 23.2021


செப்டம்பர் 23  கிரிகோரியன் ஆண்டின் 266 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 267 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 99 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்.


👉1338 – நூறாண்டுப் போர்: முதலாவது கடற்படைச் சமர் இடம்பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக வெடிமருந்துகளுடனான பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

👉1409 – 1368 வெற்றியின் பின்னர் முக்கிய வெற்றியை மிங் சீனா மீதான சமரில் மங்கோலியர்கள் பெற்றனர்.

👉1459 – ரோசாப்பூப் போர்கள்: முதலாவது முக்கிய சமர் புளோர் கீத் என்ற இடத்தில் நடைபெற்றது.

👉1641 – 100,000 பவுண்டு எடை தங்கத்துடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.

👉1780 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி ஜான் அன்ட்ரே உளவுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

👉1799 – இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.[1]

👉1803 – இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்: அசாயே என்ற இடத்தில் பிரித்தானியாவுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் இடம்பெற்றது.

👉1806 – லூயிசும் கிளார்க்கும் அமெரிக்காவின் வடமேற்குப் பசிபிக் பிராந்தியத் தேடல் முயற்சியை முடித்துக் கொண்டு செயின்ட் லூயீசுக்குத் திரும்பினர்.

👉1821 – திரிப்பொலீத்சா நகரைக் கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர்.

👉1846 – நெப்டியூன் கோள் உர்பெயின் ஜோசப், ஜோன் அடம்ஸ், யோகான் கோட்பிரீடு கல்லே ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.

👉1868 – எசுப்பானிய ஆட்சிக்கு எதிராக புவெர்ட்டோ ரிக்கோவில் கிளர்ச்சி இடம்பெற்றது.

👉1868 – புவெர்ட்டோ ரிக்கோவில் எசுப்பானிய ஆட்சியாளருக்கெதிராகக் கிளர்ச்சி ஆரம்பமானது.

👉1889 – நின்டெண்டோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

👉1905 – நோர்வேயும் சுவீடனும் அமைதியாகப் பிரிவதற்கு உடன்பட்டன.

👉1913 – பிரான்சின் ரோலண்டு காரொசு என்பவர் நடுநிலக் கடலை முதல் முதலாக வானூர்தியில் கடந்து சாதனை படைத்தார்.

👉1932 – இப்னு சவூது தலைமையில் சவூதி அரேபியா ஒன்றிணைந்தது.

👉1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி பொம்மை அரசு இத்தாலிய சோசலிசக் குடியரசு உருவானது.

👉1950 – கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் தவறுதலாக பிரித்தானியப் படைகள் மீது நேப்பாம் குண்டுகளை வீசினர். 17 பேர் கொல்லப்பட்டு 79 பேர் காயமடைந்தானர்.

👉1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.

👉1966 – நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.

👉1980 – பாடகர் பாப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியை பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் நடத்தினார்.

👉1983 – மட்டக்களப்பு சிறை உடைப்பு: இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த 41 தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர்.

👉1983 – செயிண்ட் கிட்சும் நெவிசும் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.

👉1983 – கல்ஃப் ஏர் விமானம் குண்டு ஒன்றினால் தகர்க்கப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 117 பேரும் கொல்லப்பட்டனர்.

👉1986 – இலங்கை கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

👉2002 – மொசிலா பயர் பாக்சு இணைய உலாவி வெளிவந்தது.

👉2004 – எயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 3,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

👉2008 – பின்லாந்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.


இன்றைய தின பிறப்புகள்.


👉கிமு 63 – அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர் (இ. 14)

👉1215 – குப்லாய் கான், மொங்கோலியப் பேரரசர் (இ. 1294)

👉1791 – யோகான் பிரான்சு என்கே, செருமானிய வானியலாளர் (இ. 1865)

👉1851 – எல்லன் காயேசு, அமெரிக்கக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1930)

👉1869 – டைஃபாய்டு மேரி, அமெரிக்க சமையற்கலை நிபுணர் (இ. 1938)

👉1871 – பிரான்டிசேக் குப்கா, செக் நாட்டு ஓவியர் (இ. 1957)

👉1882 – ஆல்பிரெடு ஆரிசன் ஜாய், அமெரிக்க வானியலாளர் (இ. 1973)

👉1895 – ஹரி சிங், ஜம்மு காஷ்மீர் சுதேச சமஸ்தானத்தின் இறுதி டோக்ரா குல மன்னர் (இ. 1961)

👉1900 – எஸ். குலேந்திரன், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணத்தின் 1வது ஆயர் (இ. 1992)

👉1908 – ராம்தாரி சிங் திங்கர், இந்திக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1974)

👉1917 – அசீமா சாட்டர்ஜி, இந்திய வேதியியலாளர் (இ. 2006)

👉1923 – கு. அழகிரிசாமி, தமிழக எழுத்தாளர் (இ. 1970)

👉1930 – ரே சார்ல்ஸ், அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 2004)

👉1933 – மது, மலையாளத் திரைப்பட நடிகர்

👉1941 – நவநீதம் பிள்ளை, தென்னாபிரிக்க நீதிபதி, முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையாளர்

👉1943 – தனுஜா, இந்தித் திரைப்பட நடிகை

👉1957 – குமார் சானு, இந்தியப் பாடகர், தயாரிப்பாளர்

👉1962 – ஷோபா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1980)

👉1971 – முயீன் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர்

👉1982 – ரதி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

👉1988 – டெல் போட்ரோ, அர்ச்செந்தீன டென்னிசு வீரர்


இன்றைய தின இறப்புகள்.


👉1877 – உர்பைன் லெவெரியே, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1811)

👉1939 – சிக்மண்ட் பிராய்ட், ஆத்திரிய மருத்துவர் (பி. 1856)

👉1951 – பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர்

👉1968 – பியட்ரல்சினாவின் பியோ, இத்தாலியப் புனிதர் (பி. 1887)

👉1969 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கை-சிங்கள அரசியல்வாதி (பி. 1884)

👉1973 – பாப்லோ நெருடா, நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் (பி. 1904)

👉1974 – ஜெயச்சாமராஜா உடையார், மைசூர் சமத்தானத்தின் கடைசி அரசர் (பி. 1919)

👉1995 – க. துரைரத்தினம், இலங்கை அரசியல்வாதி (பி. 1930)

👉1996 – மஞ்சு பாசினி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1906)

👉1996 – சில்க் ஸ்மிதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1960)

👉2011 – மன்சூர் அலி கான் பட்டோடி, இந்தியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1941)

👉2012 – அஸ்வினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1969)

👉2013 – ரூத் பாட்ரிக், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1907)

👉2015 – தயானந்த சரசுவதி, இந்திய ஆன்மிக குரு (பி. 1930)

👉2018 – சார்லசு காவோ, ஆங்காங்-அமெரிக்க-பிரித்தானிய இயற்பியலாளர் (பி. 1933)

👉2020 – சுரேஷ் அங்காடி, இந்திய அரசியல்வாதி (பி. 1955)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉பெரும் இனவழிப்பு நினைவு நாள் (லித்துவேனியா)

👉தேசிய நாள் (சவூதி அரேபியா)

👉ஆசிரியர் நாள் (புரூணை)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.