July 30, 2021 at 09:01PM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கை அணி மூன்று வீரர்களுக்கு ஒரு வருட சர்வதேச போட்டி தடை − தலா 10 மில்லியன் அபராதம்..! இங்கிலாந்தில் வெளியில் நடமாடிய இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான தண்டனை தொடர்பான பரிந்துரை வெளியானது இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, சுகாதார நடைமுறைகளை மீறி, இரவு வேளையில் நடமாடிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு, அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாட ஒரு வருட கால தடை விதிக்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோருக்கே இந்த போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு வீரருக்கும் தலா 10 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு போட்டிகளில் விளையாட, குறித்த மூன்று வீரர்களுக்கும் 6 மாத கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ #WHATSAPP_GROUPS 👇👇👇👇 https://ift.tt/3pNtsux #FACEBOOK_PAGE 👇👇👇 https://ift.tt/3hk68md #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan WEBSITE 👇👇👇 https://ift.tt/3bgkArn #விளம்பரங்களுக்கு 👇👇👇 https://ift.tt/3fKZbt1
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.