July 30, 2021 at 03:19PM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 நாம் பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷை கண்டிப்பா இத்தனை மாதங்களுக்கு ஒரு முறை மாத்திடனுமாம். பற்களின் ஆரோக்கியத்தைக் காக்க ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும், பற்களுக்கு இடையே சிக்கிய உணவுத் துணுக்குகளை அகற்ற ஃபிளாஸிங் செய்ய வேண்டும் என்று பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பிரஷ் நய்ந்து போகும் அளவுக்கு பயன்படுத்துவது உண்டு. அதை தூக்கிப்போட்டு புதிதாக வாங்குவது கூட பலருக்கு கடினமான காரியம். பொதுவாக 3 முதல் நான்கு மாதங்களுக்கு மட்டுமே ஒரு பிரஷ்ஷை பயன்படுத்த வேண்டும். அதற்கு முன்னதாகவே மாற்றினாலும் நல்லதுதான். பிரஷ் நார்கள் வலிமையாக இருக்க வேண்டும். 3 – 4 மாதங்களில் பிரஷ் நார்கள் தங்களின் வலிமையை இழந்துவிடுகின்றன. அதன் பிறகு அது வளைய ஆரம்பிக்கிறது. இதனால் பற்களை அவற்றால் சரிவர சுத்தப்படுத்த முடிவது இல்லை. அப்படி மாற்றாமல் தொடர்ந்து பழைய பிரஷ்ஷை பயன்படுத்தி வந்தால் பற்கள் பாதிக்கப்படும். பற்சொத்தை போன்ற பிரச்னைகள் ஏற்படும். புதிய பிரஷ்களின் வலிமையான நார்கள் பற்களுக்கு இடையே உள்ள துணுக்குகளை எளிதாக வெளியேற்றி வாயின் ஆரோக்கியத்தைக் காக்கும். தற்போது பேட்டரியில் இயங்கும் பிரஷ்ஷை பலரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். கையால் விளக்குவது நல்லதா, தானியங்கி எலக்ட்ரானிக் பிரஷ்ஷை பயன்படுத்துவது நல்லதா என்ற கேள்வி எழும். கையால் பிரஷ் செய்யும் போது பற்கள், ஈறுகளின் மீது எந்த அளவுக்கு அழுத்தம் தர வேண்டும், எவ்வளவு வேகமாக செய்ய வேண்டும் என்பது போன்ற அடிப்படை புரிதல் இருக்கும். ஆனால் மின்னணு பிரஷ்ஷில் அப்படி செய்வதற்கான வாய்ப்பு குறைவுதான். இருப்பினும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பிரஷ் செய்ய எது சௌகரியமாக இருக்கிறதோ அதை பயன்படுத்தலாம். அவரவர் விருப்பத்துக்கு உட்பட்டது அது. சிலர் பிரஷ்ஷை குளியல் அறையில் வைத்திருப்பார்கள். பிரஷ் செய்துவிட்டு, சுத்தம் செய்துவிட்டு அப்படியே குளியல் அறையில் திறந்த நிலையில் வைத்துவிடுவார்கள். இது தவறானது. குளியல் அறையில் உள்ள கிருமிகள் ஈரப்பதத்துடன் இருக்கும் பிரஷ்ஷில் வளர்ச்சி அடையலாம். எனவே, வேறு அறையில் மிகவும் மூடப்பட்ட நிலையில் பிரஷ்ஷை வைப்பது நல்லது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ #WHATSAPP_GROUPS 👇👇👇👇 https://ift.tt/3pNtsux #FACEBOOK_PAGE 👇👇👇 https://ift.tt/3hk68md #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan WEBSITE 👇👇👇 https://ift.tt/3bgkArn #விளம்பரங்களுக்கு 👇👇👇 https://ift.tt/3fKZbt1
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.