அவசர சிகிச்சை பிரிவுக்குள் அனைவரையும் நடுங்க வைத்த நாகப்பாம்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அவசர சிகிச்சை பிரிவுக்குள் அனைவரையும் நடுங்க வைத்த நாகப்பாம்பு. 


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நேற்று நாகப் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அதனால் அனைத்து தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளர்களும் பீதியடைந்துள்ளனர்.

 பின்னர் மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியர்கள் பெரும் முயற்சிகளுக்கு பின்னர் பாம்பை பிடித்து ஒரு போத்தலில் அடைத்ததாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் தலைமை செவிலியர் புஷ்பா ரம்யானி டி சோய்சா தெரிவித்தார். 

பாம்பு சுவாசிப்பதற்கு ஏதுவாக போத்தலில் சிறு துளைகள் இட்டோம். அதன்பிறகு விலங்குகளைப் பெற சம்பந்தப்பட்டோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினோம். இருப்பினும் யாரும் முன்வராத காரணத்தினால் இறுதியில் எங்கள் நண்பர் ஒருவர் பாம்பை ஒரு காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டதாகவும் அவர் கூறினார்.

 மேலும் ,வைத்தியசாலையில் பூனைகள் உள்ளிட்ட பிற விலங்குகள் இதற்கு முன்னர் வந்திருந்தாலும், நாகப் பாம்பு வந்தது இதுவே முதன் முறை என்றும் புஷ்பா ரம்யானி டி சோய்சா சுட்டிக்காட்டினார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.