பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் வேடத்தில் ஜெயராம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் வேடத்தில் ஜெயராம். 

நேற்று மாலை பொன்னியின் செல்வன் டைட்டில் லுக் வெளியானது. The golden era comes to life என்ற வாசகத்துடன் லைகா இந்த டைட்டில் லுக்கை வெளியிட்டது. ரஹ்மான், பிரகாஷ்ராஜ், த்ரிஷா உள்ளிட்ட படத்தில் பணிபுரிகிறவர்கள் இதே வாசகத்துடன் பர்ஸ்ட் லுக்கை பகிர்ந்திருந்தனர்.

 எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்தப் படத்தை மணிரத்னம் இயக்குகிறார். படத்தின் திரைக்கதை, வசனத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் பங்களிப்பு செலுத்தியுள்ளார். 

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு உள்பட ஏராளமானோர் நடிக்கின்றனர். இரு பாகங்களாக பொன்னியின் செல்வன் தயாராகிறது. முதல் பாகம் அடுத்த வருட கோடையில் வெளியாகும் என டைட்டில் லுக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

 பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன், குந்தவை பிராட்டியார், நந்தினி, பழுவேட்டரையர், அருள்மொழிவர்மன் என நிறைய முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ளன. அவர்களுக்கு இணையான கதாபாத்திரம், ஆழ்வார்க்கடியான் என்ற வைணவ சாமியாரின் கதாபாத்திரம். விஷ்ணு பக்தரான இவர் சோழர்களுக்காக உளவு பார்க்கிறவர்.

 முக்கியமான அனைத்து நிகழ்வுகளிலும் தவிர்க்க முடியாமல் வருகிறவர். சிவ பக்தர்களை தண்டம் கொண்டு அடிக்கும் அளவுக்கு தீவிர வைணவ பக்தர். அன்றைக்கு முஸ்லீம்களோ, கிறிஸ்தவர்களோ இல்லை. மதச்சண்டைகள் வைணவத்துக்கும், சைவத்துக்குமிடையில்தான் நடந்தன.

 அதனை கல்கி ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தின் மூலம் சொல்லியிருப்பார். அடிப்படையில் நகைச்சுவை மிளிரும் கதாபாத்திரம் இது. இந்த வேடத்தில் ஜெயராம் நடிப்பதாக தகவல். மொட்டைத் தலையும் பின்பக்கம் குடுமியும் கொண்டது ஆழ்வார்க்கடியானின் தோற்றம்.

 பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் ஜெயம் ரவி, கார்த்தியுடன் இருக்கும் ஜெயராம் மொட்டைத் தலையுடன் காட்சியளிக்கிறார். அதனை வைத்து அவர்தான் ஆழ்வார்க்கடியான வேடத்தை செய்வதாக கூறுகிறார்கள்.


 இதற்குமுன் பஞ்சவர்ண தத்தா (பஞ்சவர்ண கிளி) மலையாளப் படத்தில் மொட்டைத் தலையுடன் ஒரு காமெடி கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்திருப்பார். ஆழ்வார்க்கடியான் வைணவ பாடல்களை செந்தமிழில் பாடக்கூடியவர். அந்த வேடத்துக்கு ஜெயராமின் மலையாளம் கலந்த தமிழ் நியாயம் செய்யுமா? 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.