முழங்கையில் மெதுவாக தட்டினாலும் மின்சாரம் தாக்கியது போல் வலிப்பது ஏன்?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

முழங்கையில் மெதுவாக தட்டினாலும் மின்சாரம் தாக்கியது போல் வலிப்பது ஏன்? 

அவசரமாக ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது வேலையின் இடையே திடீரென முழங்கை பகுதியில் எலக்ட்ரிக் ஷாக் அடித்தது போல் இருக்கும். ஒரு சில நிமிடங்கள் இந்த உணர்வு இருந்து பின்னர் மறைந்துபோய்விடும்.

 ஏன் இப்படி நடக்கிறது என இப்போது பார்ப்போம். பள்ளிக்கூட காலங்களில் நண்பர்களோடு விளையாடும் பொழுது முழங்கை எலும்பில் சுண்டிவிட்டு விளையாடுவோம். அப்டியே ஷாக் ஆயிட்டேங்குற ரியாக்ஷன் அப்ப வரும். ஏன் இப்படி நடக்கிறது என்று நமக்கு தோன்றும். முழங்கையின் இந்த இடத்தை பண்ணி போன் ( Funny Bone ) என்று அழைக்கப்படுகின்றது. 

இந்த எலும்பு உண்மையில் உல்நார் நரம்பு(ulnar nerve) என்று அழைக்கப்படுகின்றது. ஒரு நரம்பின் நீண்ட பகுதியாகும். இது நமது கழுத்திலிருந்து தொடங்கி, தோள்பட்டை, பைசெப்ஸ்(Biceps) முன்கை ஆகியவற்றின் மூலம், மணிகட்டுக்குள் நுழைந்து இறுதியாக மோதிர விரலின் பாதியில் மற்றும் சுண்டுவிரலில் நிறைவடைகின்றது. 

நீண்டு செல்லும் இந்த நரம்பு காணப்படும் பகுதி நரம்பு உல்நார் நரம்பு என்றும் உல்நார் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் கூர்மையான, நீடித்த விளிம்பு முழங்கையின் எலும்போடு இணைந்து சற்று கீழ்ப்புறமாக செல்கின்றது. உல்நாருடன் பூட்டப்பட்ட எலும்பு ஹியூமரஸ் ஆகும். இது நமது முழங்கைக்கு மேல் பகுதியில் உள்ள எலும்பு ஆகும்.

 இது நம் உடலில் உள்ள ஒவ்வொரு நரம்பும் தசைகளால் மூடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. உல்நார் நரம்பின் நிலைமையும் அப்படித்தான். இது நமது பைசெப்ஸ், முன்கை, மோதிர விரல் மற்றும் சுண்டுவிரல் போன்றவற்றில் தசைகளால் பாதுகாக்கப்படுகின்றன.

 ஹியூமரஸ்க்கும்(humerus) முன்கைக்கும் இடையில் ஒரு வெற்றிடம் உள்ளது. இது கியூபிடல் சுரங்கம்(cubital tunnel) என்று அழைக்கப்படுகின்றது. இந்த கியூபிடல் நரம்பு எளிதாக பாதிக்கப்படக்கூடியது. எப்படியெனில் இது கியூபிடல் சுரங்கப்பாதை வழியாக செல்லும்போது, அது தோல் மற்றும் சில கொழுப்புகளால் மட்டுமே காக்கப்படுகின்றன. நாம் தெரியாமல் எங்கேயாவது இடித்துக்கொள்ளும் போது இந்த பாதுகாப்பற்ற நரம்பு எலும்போடு சேர்த்து அழுத்தப்படுகிறது. 

இதனால் அழுத்தப்பட்ட உல்நார் நரம்பு வலியின் அலைகளைத்(waves) தூண்டி மின்சார அதிர்ச்சியை வெளியிடுகின்றன. இவ்வாறு ஏற்படும் மின் அதிர்ச்சியானது நரம்பின் மற்ற பகுதிகளுக்கும் கடத்தப்படுகிறது.

 அதாவது, முழங்கை பகுதியிலிருந்து முன்கை, மோதிரவிரலின் பாதி, சுண்டுவிரல் வரை இது கடத்தப்படுகிறது. இதன் தாக்கம் அதிகமாக இருப்பின் அது கியூபிடல் டன்னல் சிண்ட்ரோம் என அழைக்கப்படுகின்றன.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.